News | செய்திகள்
தென்னிந்தியாவில் முதல் முறை…. ஆப்பிள் வாய்ப்பு பெரும் அனிருத்…!!!
தனுஷ் நடித்த 3 படம் மூலம், இசையமைப்பாளராக அறிமுகம் கொடுத்தவர் அனிருத் முதல் படத்திலேயே இவர் இசையமைத்த ஒய் திஸ் கொலை வெறி பாடம் உலக அளவில் அவருக்கு ரசிகர்களை கொடுத்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்கள் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்று ட்ரெண்டில் உள்ளார் அனிருத்.
இந்நிலையில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இசை நிறுவனமான ‘ஆப்பிள் மியூசிக்’. நிறுவனம் தற்போது இந்தியாவின் விளம்பர அம்பாசிடராக இளம் இசைப்புயல் அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ஆப்பிள் மியூசிக் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நான் தேர்வு செய்யப்பட்டதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
ஆப்பிள் மியூசிக் பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனிருத்துக்கு கோலிவுட் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள், தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
ஆப்பிள் இசை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக தென் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
