News | செய்திகள்
தெலுங்கில் இசையமைக்கும் அனிருத்தின் முதல் படம் எது தெரியுமா.
பவன் கல்யாண் படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத்தின் மியூசிக் டீசருக்கு இயக்குநர் ராஜமவுலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் 25வது படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். அவர் தெலுங்கில் இசையமைக்கும் முதல் படம் இது.
இப்படத்தை த்ரிவிக்ரம் இயக்கி வருகிறார். இந்நிலையில் பவன் கல்யாணின் பிறந்த நாளையொட்டி இன்று இப்படத்தின் பாடல் டீசர் வெளியாகி பெரும் வரப்வேற்பை பெற்றுள்ளது. 2 நிமிட டீசரை பவன் கல்யாணின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த டீசர் பாகுபலி இயக்குநர் ராஜமவுலியையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வாவ்… என்ன ஒடு தாக்கத்தை ஏற்படுத்தும் மெலோடி.. பாடல் டீசரிலேயே அசத்திவிட்டது பவர் ஸ்டார் த்ரிவிக்ரம் ஸ்டைல்; என வாழ்த்தி இருக்கிறார்.
Wow.. What an impact with a simple melody and a single shot of Powerstar..
Trivikram style… #PSPK25.. https://t.co/fMjqla7DLY— rajamouli ss (@ssrajamouli) September 2, 2017
இந்தப் படத்தின் கதைக்களம் இசைக்கு வலுவாக இருந்ததால், கண்டிப்பாக இசையமைக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு இசையமைத்திருக்கிறார் அனிருத். இப்படம் 2018 ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.
