Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியால் இணைந்த தனுஷ் – அனிருத்! ஆனாலும் சண்ட இன்னும் முழுசா முடியல.

ரஜினியின் பேரன் வேத் பிறந்தநாள் விழாவால் தனுஷும், அனிருத்தும் மீண்டும் இணைந்திருக்கும் தகவலால் ரசிகர்கள் செம குஷி மூடில் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் வொய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலகளவில் ஹிட் அடித்தவர்கள் தனுஷும், அனிருத்தும் தான். தொடர்ந்து, பல படங்களில் இருவரும் கூட்டணி அமைத்தனர். வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. திரைக்கதை ஒரு காரணம் என்றால் பாடலுக்கு அதற்கு ஒரு தூணாகவே அமைந்தது. இவர்கள் தொடர் கூட்டணிக்காக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக வந்தது அந்த அறிவிப்பு. தனுஷின் அடுத்தடுத்த படங்களில் அனிருத் இசையமைக்கவில்லை என்பதே அது.

பல தருணங்களில் இருவரும் இணையுங்கள் என பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால், தனுஷ் மற்றும் அனிருத்தோ கப்சிப்பாகவே இருந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில், தனுஷுடன் விரைவில் இணைவேன். ஆனால் இந்த வருடத்தில் இல்லை. 2019ல் கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவோம் என அனிருத் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஹிட் அடித்தது. ரசிகர்களும் செம ஆர்வமாக அடுத்தக்கட்ட அறிவிப்பை எதிர்பார்த்தனர். இருந்தும், தனுஷ் இதுவரை வாய் திறக்கவே இல்லை. இதை தொடர்ந்து, பொதுவெளியில் இருவரும் சந்தித்து கொள்வதையே தவிர்த்து வந்தனர். முன்னதாக, ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹ்ர்ஷவர்தனின் திருமணத்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து, ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் மகன் வேத்தின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காகவே, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக வீட்டுக்கு திரும்பினார். இந்த விழாவில் அனிருத் கலந்து கொண்டு இருக்கிறார். லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா, வேத்துடன் அவர் இருக்கும் புகைபப்டம் வைரலாகி இருக்கிறது. அதே விழாவில், தனுஷ் கலந்து கொண்டாலும், இருவரும் ஒன்றாக போஸ் கொடுப்பதை தவிர்த்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top