Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் மீது அப்படி என்ன வெறுப்பு அனிருத்துக்கு?

இசையமைப்பாளர் அனிருத் தான் திரையரங்கில் விரும்பி பார்க்கும் நாயகர்களின் பட்டியலில் விஜயை மிஸ் செய்தது தளபதியன்ஸ் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோலிவுட்டில் ஹாட் ஹிட் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல கட்ட யோசனைக்கு பிறகு தனுஷின் அறிவுருத்தலின் பேரில், இசையமைப்பாளர் ஆனவர் அனிருத். அப்படத்தின் வொய் திஸ் கொலைவெறி பாடல் சர்வதேச அளவில் ஹிட் அடித்தது. ஏற்கனவே, விஜயின் கத்தி, அஜித்தின் வேதாளம் படத்திற்கு இசையமைத்து ட்ரெண்ட் பாடலாக மாற்றினார். தற்போது, கமலின் இந்தியன் 2 படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
எப்போதுமே செம ஹிட்டான பாடல்களை கொடுக்கும் அனிருத், சர்ச்சையில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார். சமீபத்தில் நடந்த் ஆர்கே நகர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் அனிருத் பேசியது தற்போது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்ன பேசினார் தெரியுமா அனிருத்? சிவாவிற்கு நான் மிகப்பெரிய ரசிகன். நான் திரையரங்கத்தில் படம் பார்ப்பது மிக அரிது தான். பெரும்பாலும், தலைவர் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் படங்களை தான் அப்படி பார்ப்பேன். தற்போது அப்பட்டியலில் சிவாவும் இணைந்து இருக்கிறார். இதை நான் மேடைக்காக சொல்லவில்லை. அவரின் காமெடியை நான் மிகவும் ரசிப்பேன். இது இப்போது அல்ல வணக்கம் சென்னை படத்திற்கு முன்னரே அவர் மீது எனக்கு ஒரு க்ரேஸ் இருக்கிறது எனக் குறிப்பிட்டார். அவர் வெளியிட்ட பட்டியலில் தளபதி இல்லாதது ஏன் என தெரியவில்லை என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கடுப்பாக திட்டி வருகிறார்கள்.
