Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீ டூ..! நாங்கலாம் அப்பவே அப்படி.. எல்லா நாடகத்தையும் நடத்திவிட்டு இப்ப டயலாக் விடும் அனிருத்
இன்று #MeToo இசையமைப்பாளர் அனிருத் கூறுவது என்னவென்று பார்ப்போம். சினிமா துறையில் மட்டுமில்லாமல் பல துறைகளில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்றும் அதனை பெண்கள் தைரியமாக வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி தைரியமாக வெளிக்கொண்டு வரும் போது பல பிரபலங்களின் முகத்திரையை கிழிக்கபடும் என்று கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்கட்டும், சில நாட்களுக்கு முன்பு நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் உதட்டை கடித்ததில் சர்ச்சைக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. பாவம் சுசி லீக்ஸ் விஷயத்தை மறந்துட்டார் போல.. பாடகி சுசித்ரா இவர் மீது கூறிய புகார்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டதை மறந்துவிட்டார் போல.
சினிமா துறையில் இது போன்ற பாலியல் தொல்லைகளை களை எடுப்பதற்காக சினிமா சங்கத்தில் சேர்ந்த விஷால், நாசர், கார்த்தி அனைவரும் கூடி இதற்கென்று ஒரு தனி குழுவை அமைத்து உள்ளனர். இக்குழுவில் ஒரு மனநிலை மருத்துவர் இருப்பார் என்றும் அவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை விசாரித்து நல்லதொரு முடிவை எடுப்பார்.
இது போன்ற பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது என்று சினிமாத்துறையின் ஜாம்பவான் நடிகர் ராதாரவி கூறுகையில், இந்த பிரச்சனையால் ஒட்டுமொத்த சினிமாத்துறையை தலைகுனிந்து இருப்பதாகவும் மக்கள் தங்களை கேவலமாக நினைப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார். இது போன்ற பிரச்சனைகள் வரும் என்று முன்னரே தெரிந்திருக்க வேண்டும் இல்லையெனில் இந்த சினிமா துறையில் இருப்பதற்கு நீங்கள் தகுதியற்றவர் என்று கூறியுள்ளார்.
