anirudh-in-ajith-57

தல அஜித் நடித்து கொண்டிருக்கும் படத்தை சிவா இயக்கி கொண்டு இருக்கிறார். இந்த படத்தை பற்றி ஒரு செய்தியும் வெளி வரவில்லை மிகவும் சீக்ரெட் ஆக வழக்கம்போல வைத்துள்ளனர். ரசிகர்களும் எதாவது ஒரு செய்தி வெளிவருமா என்று காத்து கொண்டிருக்கிறனர். இப்படம் பாதி வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அனிருத் ஓர் இனிப்பான செய்தியை வெளிட்டு உள்ளார். அதுவும் படத்துக்கு முக்கியமாக இருக்கும் இசையை பற்றி. இந்த படத்தின் இசை ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருவது போல் இருக்கும். அதுவும் இதற்காகவே நியூ இன்ஸ்ட்ருமென்ட் பயன்படுத்தி இருக்கிறாராம்.

படத்தின் ரெண்டாம் பாதி படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்குமாம் , மேலும், பின்னணி இசைக்கு இந்த படத்தில் நிறைய ஸ்கோப் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது, இதில் வில்லனாக நடிக்க பல பாலிவுட் நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. அபிஷேக் பச்சன் நடிப்பார் எனவும் சொல்கிறார்கள்.

என்னமோ முதலில் படத்தின் பெயர் விட்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.