Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐயப்பன் பாடலை ஆட்டைய போட்ட அனிருத்.. சும்மா கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்.. அப்செட்டில் தலைவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள தர்பார் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தின் சும்மா கிழி என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடையே செமத்தியான வரவேற்பு பெற்றது.
பாடல் ஹிட் அடித்தும் அனிருத் மகிழ்ச்சியில் இல்லை. காரணம் சும்மா கிழி என்ற பாடல், கட்டோட கட்டுமுடி என்ற புகழ்பெற்ற ஐயப்பன் சாமி பாட்டிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக சிலர் கூறி வருகின்றனர்.
அதே சமயத்தில் வேறு சிலரோ, தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது என்ற பாடலின் அப்பட்டமான காப்பி என்று கலாய்த்து வருகின்றனர். தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் போதே ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்தின் தீம்மியூசிக்கிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்றும் சிலர் கிளப்பி விட்டனர்.
இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் அனிருத். அதே சமயத்தில் இந்த விஷயம் தலைவர் காதுக்கு சென்றும் அமைதி காப்பதால் இன்னும் நடுக்கத்தில் உள்ளாராம். தற்போது தளபதி ரசிகர்கள் மேலும் பயத்தில் உள்ளனர்.
காரணம் தளபதி 64 திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதுதான்.
