சிவாவுடன், அஜித் தொடர்ந்து நான்காவது முறையாக இணையும் படம் “விசுவாசம்”.  எடிட்டராக ரூபென், ஒளிப்பதிவாளராக வெற்றி, ஹீரோயினாக நயன்தாரா போன்றவை உறுதியான தகவல்கள்.

Visuvasam

ஆரம்பத்தில் இசை யுவன் என்றனர், பின்னர் அனிருத் என்ற பேச்சு, இறுதியில் டி. இமான் என்று செய்திகள் வந்தது. ஆரம்பம் முதல் இசை அமைப்பாளர் யார் என்ற குழப்பம் இருந்த வண்ணமே இருந்தது.

D Imaan

இந்நிலையில் இன்று இசையைமைப்பாளராக பணியாற்றுவது டி. இமான் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உறுதி செய்தார்.

இளம் புயல் அனிருத் ரவிச்சந்தர் தன் வாழ்த்துக்களை இமான் அவர்களுக்கு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு. இசையால் அசத்துங்க நம்ம தலயை வைத்து.” என்று கமெண்ட் செய்துள்ளார்.

அனிருத்தின் இந்த செயலை தல ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Vedalam

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

ANI

தல அஜித்தின் ஒபெநிங் பாடல் இமான் இசையில் அனிருத் பாடுவது போல் அமைந்தால் தல ரசிகர்களுக்கு கட்டாயம் மாஸ் தல தீபாவளி தான்.