fbpx
Connect with us

Cinemapettai

அனிருத்திற்கு கைகொடுத்த அஜித் – மகிழ்ச்சியில் அனிருத்

News | செய்திகள்

அனிருத்திற்கு கைகொடுத்த அஜித் – மகிழ்ச்சியில் அனிருத்

ajith-anirudhதன்னோடு பணிபுரிபவர்களில் யாரையேனும் பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்களுடன் பணிபுரியும் பழக்கம் கொண்டவர் தல அஜித். உதாரணத்திற்கு நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, A.M.ரத்னம், விஷ்ணுவர்தன், வீரம் சிவா இப்படி கூறலாம். அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது வீரம் சிவாதான் என்பது முடிவாகியுள்ள நிலையில் அடுத்த படத்திற்கும் அனிருத்தே இசையமைகட்டும் என்று அஜித் கூறியுள்ளாராம்.

அனிருத்தின் நெருங்கிய உறவினரான தனுஷே அடுத்த படத்திலிருந்தும், மேலும் மூன்று படங்களில் இருந்தும் அனிருத்தை பீப் பாடல் சர்ச்சையால் நீக்கியுள்ளார். இந்நிலையில் தல57 படத்தில் அனிருத் பற்றி பேச்சு வருகையில் அஜித், என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை அனிருத்தே அடுத்த படத்திலும் இசையமைக்கட்டும் என்று கூறினாராம். அதனால் அஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளதாக கூறுகின்றார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top