கவினை திராட்டில் விட்டு எஸ்கேப்பான அனிருத்.. டாடாக்கு கிடைத்த லைஃப் டைம் வியாபாரம்

கவின் லிப்ட், டாடா, ஸ்டார் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு தரமான நடிகராக நிரூபித்து வருகிறார். ஆரம்பத்தில் சறுக்கினாலும்,அதன் பின் மீண்டும் எழுந்து வருகிறார். இவருக்கு சினிமாவில் நுழைய ஆரம்பப் புள்ளி வைத்தது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இப்பொழுது கிஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் முழுவதுமாக சூட்டிங் முடிந்து விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பூசணிக்காய் உடைத்து விடுவார்கள். ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் இன்னும் முடிந்த பாடில்லை.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் ஆனால் அவர் இப்பொழுது இருக்கும் பிசியில் தட்டி கழித்து வருகிறார். அனிருத் அமெரிக்காவில் ஒரு இசை கச்சேரி நடத்துகிறார் அதற்காக அடிக்கடி அமெரிக்கா சென்று வருகிறார். இப்பொழுதும் அங்கே தான் இருக்கிறார்.

டாடாக்கு கிடைத்த லைஃப் டைம் வியாபாரம்

அனிருத். கவினின் கிஸ் பட வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அமெரிக்கா கிளம்பி விட்டார். அமெரிக்காவில் நேரம் கிடைக்கும்போது ரெடி பண்ணுகிறேன் என்று இந்த படத்தை டீலில் விட்டு வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் வியாபாரமாகியுள்ளது

14கோடிகளுக்கு இந்த படத்தின் ஆடிய ரைட்சை விற்பனை செய்துள்ளனர். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கி வருகிறார். 90% படம் முடிந்தாலும் பாடல் காட்சிகள் இன்னும் ரெடியாகவில்லை.

Next Story

- Advertisement -