Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு பட பாட்டை காப்பியடித்த அனிருத்.. சிவகார்த்திகேயனின் செல்லம்மா பாடல் சர்ச்சை!
சினிமா நடிகர்களில் அதிகம் சர்ச்சைகளை சந்திக்கும் நடிகர் சிம்பு என்றால் இசையமைப்பாளர்களில் அதிகமாக காப்பியடிக்கும் சர்ச்சைகளில் மாட்டி சிக்குபவர் நம்ம அணிருத்.
சமீபகாலமாக அனிருத் இசையமைக்கும் பாடல்கள் அனைத்துமே காப்பி என்ற பேச்சு கிளம்பி வருகிறது. சமீபத்தில் தர்பார் படத்தில் வெளியான சும்மாகிழி பாடல் ஐயப்பன் படத்தை காப்பி அடித்ததாக சர்ச்சைகள் கிளம்பியது.
அதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் எழுதிய கோலமாவு கோகிலா படத்தில் உருவான, எனக்கு இப்ப கல்யாண வயசு வந்துருச்சு என்ற பாடலின் இசை ஹாலிவுட் கலைஞர் ஒருவரின் இசை அப்பட்டமாக காப்பி அடித்ததை வீடியோவுடன் வெளியிட்டனர் ரசிகர்கள்.
இப்படி தொடர்ந்து அனிருத்தின் பாடல்கள் சர்ச்சைகளில் மாட்டினாலும் இசையமைப்பாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் நபராக வலம் வருகிறார். அனிருத் இசையமைப்பில் அடுத்ததாக உருவாக இருப்பது சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்.
சமீபத்தில் டாக்டர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது. செல்லம்மா என்ற பாடல் தற்போது இணையதளங்களில் செம ஹிட் அடித்துள்ளது. ஆனால் இந்தப் பாடலின் இசை சிம்புவின் படத்தில் இருந்து ஆட்டையை போட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
சிம்பு நடிப்பில் உருவான தம் படத்தில் வெளிவந்த பாடல் கண்ணம்மா கண்ணம்மா என்ற பாடல். இந்தப் பாடலின் பேக்கிரவுண்ட் இசையை ஸ்லோ மோஷனில் வாசித்தால் அப்படியே செல்லமா பாட்டு வந்து விடும் என தற்போது ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
