வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கருப்பு நிறத்தில் பால்.. இதுல இவ்வளவு சத்துக்களா? எந்த மிருகம் தெரியுமா?

பால் நமது அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக உள்ளது. பால் குடிக்கிறோமோ இல்லையோ, பாலை தினமும் பயன்படுத்துகின்றோம். மனித உயிர் பிறந்தவுடன் குடிப்பதும் பால் தான்.. உயிர் போன பின்பு வாயில் ஊற்றுவதும் பால் தான். இப்படி பால் என்பது நமது கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாம் நிறைய வகையான பால்களை கேள்வி பட்டிருப்போம். சிலவற்றை உட்கொண்டிருப்போம். உதாரணத்திற்கு, ஆட்டு பால், உடலுக்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது என்று கூறுவார்கள். ஒட்டகத்தின் பால், வளர்ச்சிக்கும் உதவும் என்று கூறுவார்கள். இப்படி இருக்க, மனிதன் தாண்டி, பெரும்பாலான மிருகத்தின் பாலும் வெண்மை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த ஒரு மிருகத்தின் பால் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்குமாம். மேலும், தனது வாழ்க்கையில் இந்த மிருகம் ஒருமுறை தான் குட்டியை ஈன்றெடுக்குமாம்.

கருப்பு நிறத்தில் பால்

உலகில் சுமார் 6,400 பாலூட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது சிறப்பு அல்ல, சிறப்பு என்னவென்றால் இந்த 6,400 பாலூட்டிகளில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிற பாலை தரும் என்பது தான். மேலும் இந்த விலங்கு, 4-5 வயதிற்குள் தான் இனப்பெருக்கம் செய்யுமாம்.

கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு கருப்பு காண்டாமிருகம்தான். இவை ஆப்ரிக்க கருப்பு காண்டாமிருகம் என அழைக்கப்படுகின்றன. இந்த வகை காண்டாமிருகங்களின் பாலில் 0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது. தண்ணீர் போல இருக்கும் காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் இருக்குமாம்.

இந்த கருப்பு காண்டாமிருகம், ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்கும். இவை ஒருமுறை ஒரு குட்டியை மட்டுமே ஈன்றெடுக்குமாம். அதன் மெல்லிய பால் தான், இவைகள் ஒருமுறை மட்டும் இனப்பெருக்கம் செய்வதற்கு காரணமாக உள்ளது என்றும் விஞானிகள் கூறுகின்றனர்.

- Advertisement -

Trending News