fbpx
Connect with us

அஸ்வின் தான் இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர். சொன்னது யார் தெரியுமா ?

Sports | விளையாட்டு

அஸ்வின் தான் இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர். சொன்னது யார் தெரியுமா ?

ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களை இந்திய தேர்வாளர்கள் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓரம் கட்டிவிட்டனர். வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணியில் சேர்க்கப்படுகிறார். இம்முறை வெஸ்ட் இண்டீசில் இரண்டு போட்டிகளிலும் அவர் சேர்க்கப்படவில்லை. ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஆடினார். ஜடேஜாவின் மேற்கேற்றபட்ட பேட்டிங் மற்றும் சிறப்பான பீல்டிங் காரணமாகவே அவருக்கு அந்த ஸ்பின்னர் வாய்ப்பு சென்றதாக பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும் சொன்னார்.

இந்நிலையில் ரவிசந்திரன் அஸ்வின் பற்றி முன்னாள் வீரர் மற்றும் கோச்சான அணில் கும்ப்ளே பிரபல இணையதளத்திற்கு அளித்த பெட்டியில் பின்வருமாறு கூறியுள்ளார் …

“இன்றையதேதிக்கு உள்ள ஸ்பின்னர்களில் சிறந்தவர் அஸ்வின் தான். சில இடங்களில் காயம் காரணமாக தனது முழு திறன் அளவுக்கு அவரால் விளையாட முடியாமல் போனது, ஆனால் இந்த டீம்மின் நம்பர் 1 ஸ்பின்னர் அவர் தான். அவரை ஆடும் 11 வீரக்கள் லிஸ்டில் சேர்க்க பட வேண்டும், அதற்கான வழியை கண்டுபிடிங்க.

Anil Kumble

என்னை பொறுத்தவரை இரண்டு ஸ்பின்னர்களுக்கு டீம்மில் கட்டாயம் இடம் உண்டு, ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன் தான். அஸ்வின் வசம் நான்கு சதம் உள்ளது, ஜடேஜாவும் தற்பொழுது பேட்டிங் சரியாக ஆடி வருகிறார். வெஸ்ட் இண்டீசில் அதை மீண்டும் நிரூபித்தார், சிறந்த பௌலரும் கூட. இந்த இருவரும் இணைந்து எதிர் அணிக்கு பெரிய சவாலாக இருப்பர். வெளிநாட்டு தொடர்களில் எப்பொழுதும் நான்கு பௌலரை வைத்து 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது.

மூன்று வேகப்பந்துவீச்சாளர், இரண்டு ஸ்பின்னர் அதுவும் நான்றாக பேட்டிங் ஆடும் இருவர் என்பதால் அதுவே சிறந்த டீம். எனக்கு நம்பிக்கை உள்ளது அஸ்வின் கட்டாயம் ஆடும் வீரர்களில் இடம் பிடிப்பார். அவரை போன்ற திறன் உள்ள வீரர் வெளியே அமர்வது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. டீம் நிர்வாகம் தான் இதை பற்றி சிந்திக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top