Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-anikha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயனின் 2.0 வெர்ஷனாக மாறிய அனிகா.. இந்த ஒரு புகைப்படத்தை அஜித் பார்த்தால் கூட மெர்சல் ஆயிடுவர்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தல அஜித்தின் ரீல் மகள் என்று கூறும் அளவிற்கு தமிழகமெங்கும் புகழ்பெற்று இருப்பவர்தான் அணிகா சுரேந்திரன். இவர் தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை தற்போது இளம் நடிகைகளுக்கு எல்லாம் போட்டி கொடுக்கும் வகையில் விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மனதைக் கவர்ந்து வருகிறார்.

தற்போது அணிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேலும் அந்த புகைப்படத்தில் அணிகா, நயன்தாரா போல இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் பலர் அணிகாவின் அழகில் மெய் மறந்து கிடக்கின்றனர்.

அதாவது பண்டிகை காலம் வந்து விட்டாலே நடிகைகள் பலர் போட்டோ ஷூட்களை நடத்தி, அவற்றை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் அணிகா தீபாவளியை முன்னிட்டு கருப்பு நிற சுடிதாரில் கையில் மத்தாப்பு, உதட்டில் சிரிப்பு என மாசான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தீபாவளி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலர், ‘அணிக்காகக்கு, நயன் தங்கச்சியா நடிக்கிற ரோல கொடுத்தா சூப்பரா இருக்கும்’ என்று தங்களது கருத்துக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
To Top