Sports | விளையாட்டு
சதம் அடிக்க முடியததால் உச்சக்கட்ட கோபம்.! பஞ்சாப் வீரருக்கு அதிகபட்ச தண்டனை கொடுத்த நிர்வாகம்
ஐபிஎல் தொடரின் ஐம்பதாவது லீக் போட்டி நேற்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது.
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் இரு அணியினரும் கடுமையாக போராடினர்.
இந்த போட்டியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சிறப்பாக விளையாடினார். அவர் 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து சதத்தை கோட்டை விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத அவர் விரக்தியில் தனது பேட்டை தூக்கி எறிந்தார், தரையில் பட்டு சிறிது தூரம் சென்ற பேட் யார் மீதும் படவில்லை.
பேட்டை எரிவது தவறு என்று களத்தில் இருந்த நடுவர்கள் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐபிஎல் நிர்வாகம் இது லெவல்-1 குற்றமென்று 10% அபராதம் விதித்து அவரை எச்சரித்தனர்.
கோபத்தில் பேட்டை தூக்கி எறிவது எல்லாம் தவறு என்று ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

chris gayle ipl
