Hollywood | ஹாலிவுட்
கணவருடன் விவாகரத்து..! அரசியலில் இறங்கும் பிரபல நடிகை..!

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது அரசியல் பயணத்தை பற்றி பேசியுள்ளார்..!
ஏஞ்சலினா ஜோலி ஹாலிவுட்டில் ஒரு காலத்தில் கலக்கிய நடிகை மட்டுமல்லாமல் ஆக்சன் படங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவர் இப்பொழுது தனது குழந்தைகளுக்காக தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு சமூகப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பிபிசி நியூஸ் சேனலில் அவர் பேட்டியளித்துள்ளார் அப்பொழுது செய்தியாளர் நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு இதை 15 வருடங்களுக்கு முன்பு கேட்டு இருந்தால் கண்டிப்பாக சிரித்திருப்பேன் ஆனால் இப்பொழுது நிறைய பொறுப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
தான் அரசியலுக்கு தகுதியானவரா என்று தெரியவில்லை மற்றும் எதையும் நான் மறைத்து வைத்ததில்லை. திறந்த புத்தகம் போல் தான் வாழ்க்கையிலும் இருப்பேன் என்று கூறியுள்ளார். மாற்றத்திற்கான வழிகள் என்ன என்று கேட்டதற்கு அவர் கூறுகையில் நான் ஐநா சபையுடன் இணைந்து பல நல்ல விஷயங்களை செய்து வருகிறேன் மக்களுக்கு உதவி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
சினிமா செலிபிரிட்டி அரசியலுக்கு வருவது டோலிவுட்டில் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றன. அரசியல் விஸ்வரூபமெடுக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
