fbpx
Connect with us

ஆண்டிராய்டு மொபைலின் முக்கிய செட்டிங்கள்! டெக்பேட்டை

News | செய்திகள்

ஆண்டிராய்டு மொபைலின் முக்கிய செட்டிங்கள்! டெக்பேட்டை

மொபைல் உலகில் ஆண்டிராய்டின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இணையத்தில் கோடிக்கணக்கான இலவச செயலிகள் ஒவ்வொருநாளும் வந்தவண்ணம் உள்ளன.

இவற்றால் நமது சுய விவர பாதுகாப்பு முழுமையாய் பறிபோகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அவற்றை தவிர்க்க இயலாது என்பதே மறுக்கத்தக்க உண்மை.

சரி நமது ஆண்டிராய்டு மொபைலில் பாதுகாப்பு குறித்து முக்கியமாக நாம் செய்ய வேண்டிய சில செட்டிங்களை வாருங்கள் பார்ப்போம்.

google android

google android

பாதுகாப்பான செயலிகளின் தரவிறக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு Google Play store  வழிவகை செய்துள்ளது. உங்கள் மொபைலில் Google Play storeஐ திறந்துகொள்ளுங்கள், அதில் மேலே இடதுபுறமுள்ள மெனுவை தட்டுங்கள். இப்போது வரும் லிஸ்டில் Play Protect என்பதை தேர்வு செய்யுங்கள்.

இதை செய்தவுடன் வரும் பக்கத்தில் Improve Harmful App Detection என்பதை On செய்யுங்கள். இனி நீங்கள் தரவிறக்கும் அனைத்து செயலிகளையும், முன்பே இருக்கும் பழைய செயலிகளையும் Google scan செய்துவிடும்.

android-icon

உங்கள் மொபைல் செட்டிங்க்ஸ்ஸில் Privacy தேர்வு செய்யுங்கள் அதில் Allow installation of apps from unknown  sources என்பது On செய்யப்படிருந்தால் அதை உடனே Off செய்துவிடுங்கள். இது பாதுகாப்பற்ற இடங்களிலிருந்து நீங்கள் அறிந்தோ அறியாமலோ தரவிறக்கும் செயலிகளை தடுக்கும்.

அதே Privacy தேர்வில் Device Administrators  என்பதை தட்டுங்கள். அதில் நீங்கள் அறியாவண்ணம் பல செயலிகள் உங்கள் மொபைலை கண்ட்ரோல் செய்யும் அதிகாரங்களை பெற்றிருக்கும், அதில் தேவையானதை தவிர்த்து மற்றதை Off செய்துவிடவும்.

mobile

செட்டிங்க்ஸ்ஸில் Accessibility  என்பதை தேர்வு செய்யுங்கள் அதில் நீங்கள் வைத்திருக்கும் Anti Virus தவிர்த்து மற்ற அனைத்து optionகளும் Off செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் தேவையற்றவற்றை நீங்களே Off செய்துகொள்ளலாம்.

செட்டிங்க்ஸ்ஸில் Permissions  என்பதை தேர்வு செய்யுங்கள், அதில் நீங்கள் இன்றுவரை தரவிறக்கிய ஒவ்வொரு செயலிக்கும் நீங்கள் அளித்திருக்கும் அனுமதி குறித்த விபரங்கள் இருக்கும். உதாரணமாக முகநூலுக்கு உங்கள் மொபைலின் blue tooth optionஐ control செய்யும் அனுமதி defaultஆக தரப்பட்டிருக்கும். இது போன்ற அனுமதிகளை உங்கள் விருப்பத்தின் பெயரில் ரத்து செய்துகொள்ளலாம்.

mobile

செட்டிங்க்ஸ்ஸில் notificationஐ தேர்வு செய்துகொள்ளுங்கள், அதில் when device is locked என்பதை தட்டுங்கள், தட்டியவுடன் உங்களுக்கு மூன்று optionகள் காட்டப்படும் அதில் Hide Sensitive Notification Content என்பதை தேர்வு செய்தீர்கள் என்றால் அதன் பிறகு உங்கள் மொபைல் லாக் நிலையில் இருக்கும்போது வரும் notificationகளில் யாரிடமிருந்து என்ன தகவல் வந்துள்ளது என்பது வெளிப்படையாக தெரியாது, உதாரணமாக முகநூலில் ஒரு செய்தி வந்துள்ளதாக மட்டுமே தெரியும்.

மேலே இருக்கும் செட்டிங்களை பயன்படுத்தி உங்கள் ஆண்டிராய்டு மொபைலை கூடுமானவரை பாதுகாப்போடு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top