Connect with us
Cinemapettai

Cinemapettai

android-kunjappan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மலையாளத்தில் சாதனை படைத்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் Ver 5.25 பட தமிழ் ரீமேக்.. இந்த இயக்குனர் தான் ஹீரோ! சூப்பர் சாய்ஸ்!

வெவ்வேறு விதமான ஜானர்களில் படத்தை எடுத்து அசத்துவதில் வல்லவர்கள் மோலிவுட். அந்த வகையில் கடந்த வருடம் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் படுவள் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படமே ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5 .25(android kunjappan ver 5.1).

கதை – வயதான அப்பா (சூரஜ்) தனது இன்ஜினியரிங் முடித்த மகனை (சோப்பின் சாஹிர்) வெளியூருக்கு வேலைக்கு எங்கும் அனுப்பாமல், தன்னுடனே இருக்க வைக்கிறார். கிடைத்த எந்த வேலையிலும் 3 மாதங்களுக்கு மேல் வேலை செய்ததில்லை நம் ஹீரோ.

34 வயதான நம் ஹீரோ, ஒரு நாள் கடுப்பாகி ஜப்பானிய கம்பெனி ஒன்றின்  ரஷ்ய ப்ராஞ்சில் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அப்பாவை கவனிக்க நர்ஸை பணிக்கு அமர்த்துகிறார். எனினும் வயதானவருக்கு யாரும் செட் ஆகவில்லை.

ரஷ்யாவில் மலையாளம் தெரிந்த ஜப்பானிய பெண்ணுடன் நட்பும் ஏற்படுகிறது நம் ஹீரோவுக்கு. தன் கம்பனியில் பேசி தன் அப்பாவுக்கு ரோபோட் ஒன்றை கொண்டு வருகிறான். முதலில் பெரியவர் ரோபோட்டை ஒதுக்கினாலும், நாளடைவில் இவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகிறது.

ரோபோட்டை தனது மகன் போல நடத்த ஆரம்பிக்கிறார். பேஸ்புக்கில் தனது காலேஜ் காதலியுடன் சாட்டிங், ரோபோட்டுக்கு ஜாதகம் பார்ப்பது, டிரஸ் போட்டுவிடுவது என லூட்டியுடன் நகர்கிறது திரைக்கதை. நான்கு மாதங்களுக்கு ட்ரையல் பார்க்கவே கொடுக்கப்பட்ட ரோபோ அது.

அதனை மீட்டு செல்ல மகன் வரும் சமயத்தில் வீட்டை விட்டு வெளியே செல்கிறார் பெரியவர். இறுதியில் என்ன தான் டெக்னலாஜி வளர்ந்தாலும் மனிதர்களும் மனிதநேயமும் தான் மிஞ்சும், அதுவே நிரந்திரம் என்ற மெஸேஜை சொல்லி இப்படம் முடிகிறது.

அமெரிக்க படமான ROBOT & FRANK என்ற படத்தின் கிட்டத்தட்ட தழுவல் இப்படம். இந்த படத்தை தமிழில் நம்பர்-1 இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் ரீமேக் செய்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் படம் தமிழிலும் ஒரு சரித்திர சாதனையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Continue Reading
To Top