மிஷ்கின் இயக்கத்தில் விஷால் மற்றும் பிரசன்னா நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்’ ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிகர் கமல் மகள் அக்ரா ஹாசன் நடிப்பதாக இருந்தது.

ஆனால், நடிகர் அஜீத்துடன் ‘விவேகம்’ படத்தில்  அக்ரா ஹாசன் நடிப்பதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் துப்பறிவாளன் படத்தில் இருந்து விலகிக்கொண்டார். அவருக்குப் பதிலாக ஆண்ட்ரியா படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது துப்பறிவாளன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. தற்போது சமுக வலைத்தளங்களில் ஹார்லி டேவிட்சன் பைக்கை நடிகை ஆண்ட்ரியா ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

விசாரித்துப் பார்த்தால், துப்பறிவாளன் படத்தில் ஒரு காட்சிக்கு ஆண்ட்ரியா பைக்கை ஓட்ட வேண்டுமாம். அவருக்கு பைக் ஒட்ட தெரியாததால் கடந்த சில நாட்களாக அவர் பயிற்சி எடுத்து வருகிறாராம். நன்றாக ஓட்ட கற்றுக்கொண்ட பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என கூறிவிட்டாராம் மிஷ்கின், அந்த பைக் ஓட்டும் படம் தான் வேற ஒன்னும் இல்லை …