Connect with us
Cinemapettai

Cinemapettai

master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை எகிற விட்ட ஆன்ட்ரியா.. விறுவிறுப்புடன் காத்திருக்கும் தளபதியின் ரசிகர்கள்

தளபதி விஜயின் ரசிகர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தான் ‘மாஸ்டர்’ இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய காலதாமதமானாலும் தியேட்டரில் மட்டுமே  வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் அனிருத்தின் ‘குயிட் பண்ணுடா’ என்ற லிரிக்ஸ் பாடலானது நேற்று ரிலீஸாகி ரசிகர்களால் தெறிக்கவிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆன்ட்ரியா, படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார்.

அதில் “மாஸ்டர் படத்தில் நான் நடித்து இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் 2021 ஆண்டில் சாதனை படைக்கும் படமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதில் தளபதி விஜயுடன் நடித்துள்ளது மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக இந்த படத்திற்குப் பிறகு நானும் தளபதியின் ரசிகை ஆகிவிட்டேன். அந்த அளவுக்கு நல்ல மனுஷன்” என்று நெகிழ்ச்சியுடன் ஆன்ட்ரியா கூறியுள்ளார்.

Andrea Jeremiah

இந்த தகவலால், ஏற்கனவே மாஸ்டர் படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்று விழி மேல் விழி வைத்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்னும் வெறி ஏற்றி உள்ளார்.

Continue Reading
To Top