Connect with us
Cinemapettai

Cinemapettai

andrea-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆண்ட்ரியா ஐ அம் வெரி சாரியா.. கஷ்டப் படுத்திட்டேன், மன்னிச்சிடு எனப் புலம்பும் இயக்குனர்

திடீரென ஆண்ட்ரியாவிடம் பிரபல இயக்குனர் ஒருவர் என்னை மன்னித்துவிடு என்று கேட்டுள்ள விஷயம் விவகாரமாக திரிக்கப்பட்டு கோலிவுட் வட்டாரங்களில் பல கோணங்களில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

ஆண்ட்ரியாவின் சினிமா வாழ்க்கை நன்றாக அமைந்தாலும் அவரது சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் அரசியல் பிரபலம் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் இருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் விரைவில் அவரைப் பற்றிய செய்திகளை உலகுக்கு அம்பலப்படுத்துவேன் எனவும் கோவில்பட்டி வீரலட்சுமி ரேஞ்சுக்கு சவால் விட்டு பின்னர் சத்தமில்லாமல் அடங்கினார்.

இப்படி அடிக்கடி பரபரப்பைக் கிளப்பும் ஆண்ட்ரியா தற்போது அமைதியாக சில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2. பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து பிசாசு 2 படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ஆண்ட்ரியாவுடன் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அதை தவிர்த்து முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வருகிறார் மிஸ்கின். மிஸ்கின் இந்த படத்தில் ஆண்ட்ரியாவை மிகவும் வேலை வாங்கி விட்டதாக அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த படத்திற்காக ஆண்ட்ரியாவை ரொம்ப கஷ்டப்படுத்தி மெனக்கெட வைத்து பல காட்சிகளை எடுத்ததாகவும், தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு சில தொந்தரவுகள் கொடுத்ததாகவும் குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார் மிஷ்கின்.

myskin-andrea

myskin-andrea

Continue Reading
To Top