fbpx
Connect with us

Cinemapettai

சீயான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தில் இணைந்த ஆண்ட்ரியா !

News | செய்திகள்

சீயான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தில் இணைந்த ஆண்ட்ரியா !

இருமுகன்’ படத்திற்கு பிறகு ‘சியான்’ விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ மற்றும் ஹரியின் ‘சாமி 2’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது.இதில் ‘ஸ்கெட்ச்’ பொங்கல் தினத்தன்று ரிலீசாகிறது.

sketch


படத்தில் ‘சியான்’ விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா மேலும், ஆர்.கே.சுரேஷ், ‘கங்காரு’ புகழ் ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, ரவி கிஷன், பாபுராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

sketch movie


சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு தமன் இசையமைக்கிறார், ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வி கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், மற்றும் விக்ரம் பாடிய ‘கனவே கனவே’ சிங்கிள் டிராக் மற்றும் அடுச்சி புடிச்சு பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. .

Sketch


தற்பொழுது , படத்தில் இடம்பெறும் ‘தாடிக்காரா’ என்ற பாடலை தமனுடன் இணைந்து நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளதாக இசையமைப்பாளர் தமன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


வெகு விரைவில் ஆடியோ மற்றும் டிரையிலர் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top