fbpx
Connect with us

Cinemapettai

14 கொடூர வெறிநாய்களுக்கு நடுவில் தலைகீழாக தொங்கும் ஆண்ட்ரியா.. பரபரப்பை கிளப்பும் NO ENTRY போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

14 கொடூர வெறிநாய்களுக்கு நடுவில் தலைகீழாக தொங்கும் ஆண்ட்ரியா.. பரபரப்பை கிளப்பும் NO ENTRY போஸ்டர்

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி தற்போது நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அசால்ட்டாக நடித்து விடுவார்.

அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ரியா நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதியுமளவுக்கு இருக்கும். மற்ற கமர்சியல் நடிகைகளைப் போல ஏனோதானோ என அதிகம் நடிக்க மாட்டார்.

அந்த வகையில் அடுத்ததாக ஆண்ட்ரியா சோலோ ஹீரோயினாக நடிக்க இருக்கும் திரைப்படம் நோ என்ட்ரி(no entry). இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இதில் 14 கொடூரமான வெறிநாய்களுக்கு மத்தியில் யாரோ ஆண்ட்ரியாவை தலைகீழாக கட்டி தொங்க விட்டது போன்ற போஸ்டர் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

andrea-no-entry-first-look-01

andrea-no-entry-first-look

நோ என்ட்ரி படத்தில் ஹனிமூனுக்கு செல்லும் இளம் தம்பதியினர் கொடூரமான 14 வெறிநாய்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் மூலக்கதை.

இந்த படத்தின் போஸ்டர்கள் ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

andrea-no-entry-first-look

andrea-no-entry-first-look

மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நடிகையின் படத்துக்கு இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டுள்ளதும் இதுதான் முதன்முறை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top