fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்யை பார்த்து அசடு வழியும் ஆண்ட்ரியா.. பிறந்தநாளுக்கு மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புதிய புகைப்படம்

vijay andrea

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யை பார்த்து அசடு வழியும் ஆண்ட்ரியா.. பிறந்தநாளுக்கு மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புதிய புகைப்படம்

விஜய் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ், விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் இப்படத்தினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மாஸ்டர் படக்குழு தொடர்ந்து ஒவ்வொன்றாக படப்பிடிப்பு தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறது. முதலில் விஜய் பாடியதாக குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டனர். அதன் பிறகு படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார்.

தினமும் மாஸ்டர் படத்தைப்பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஏதாவது ஒரு தகவலை வெளியிட்டு தான் வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் ஆண்ட்ரியாவும் விஜய்யும் பக்கம் பக்கமாக அமர்ந்தபடி உள்ளது. விஜய்யின் நண்பரான சஞ்சீவ் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் ஆண்ட்ரியா விஜய்யை பார்த்து சிரித்தபடி மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது.

vijay andrea

vijay andrea

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top