Tamil Cinema News | சினிமா செய்திகள்
அய்யோ.. ஏமாத்துனது “அவரு” இல்லை.. திடீர் திருப்பம்.. ஆண்ட்ரியா விளக்கம்
தன்னை காதலித்து ஏமாற்றியவர் அரசியல்வாதி நடிகர் இல்லை என நடிகை ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.
ப்ரோக்கன் விங்க் என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை நடிகை ஆண்ட்ரியா எழுதியதுடன் அதை பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். அப்போது காதல் வலியை சொல்லும் பாடலை பாடினார். சோகமாகவும் மாறினார். ஏன் இப்படி திடீர்ன்னு ஆண்ட்ரியா சோகமானார் என யாருக்கே புரியவிலலை.
அப்போது ஆண்ட்ரியா கூறுகையில் திருமணம் ஆன நபரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்தார்.
தனது broken wings புத்தகத்தில் எல்லாவற்றை பற்றியும் சொல்லி உள்ளதாகவும் அந்த நபரை பற்றின தகவல்களை தெரிவிக்க போவதாகவும் சொல்லி அதிரவைத்தார்.
இந்நிலையில் அவரை ஒரு அரசியல்வாதி நடிகர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக தகவல்கள் பரவின. இதை மறுத்துள்ள ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில், 10 வருஷத்துக்கு முன்னாடி நடந்த என் காதல், அதன் தோல்வி பற்றி சொன்னேன்.
அந்த கவிதை அப்போது எழுதியது தான் ஆனால் அதற்குள் திரித்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் என்னை ஒரு அரசியல்வாதி லவ் பண்ணி ஏமாற்றி விட்டதாகவும், அதனால்தான் காதல் தோல்வி பற்றி எழுதியிருப்பதாகவும் செய்தி பரப்பிவிட்டார்கள். இதையெல்லாம் பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருந்துச்சு.
இதனால் நான் விளக்கம் தராமல் அமைதியாக இருந்துவிட்டேன். அப்படி எந்த விஷயமும் எனக்கு நடக்கவில்லை, அரசியல்வாதி என்ற வார்த்தையைகூட நான் சொல்லவில்லை. கற்பனையை கிளப்பி விட்டிருக்கிறார்கள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.
