Connect with us

Cinemapettai

மாஸ்டர்ல விஜய் சேசிங் சீன்ல பட்டையை கிளப்பிருக்கிறார்.. தளபதி பற்றி செம்ம அப்டேட் கொடுத்த ஆண்ட்ரியா

vijay-andrea

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர்ல விஜய் சேசிங் சீன்ல பட்டையை கிளப்பிருக்கிறார்.. தளபதி பற்றி செம்ம அப்டேட் கொடுத்த ஆண்ட்ரியா

என்னடா இது! மாஸ்டர் படமும் வெளிவரல, டிரைலர் பற்றியும் எந்த பதிலும் இல்ல என காஞ்சு போய்க் கிடந்த விஜய் ரசிகர்களுக்கு கவர்ச்சி கட்டழகி ஆண்ட்ரியா மாஸ்டர் படத்தைப் பற்றி சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் மகேந்திரன் என பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் வெளியாகிய அனைத்து பாடல்களும் செம ஹிட் அடித்துள்ளது. இதனால் படக்குழு செம குஷி. ஆனால் தற்போதைய சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் மாஸ்டர் படத்தின் வெளியீடு தள்ளிக் சென்றுவிட்டது.

இருந்தாலும் தமிழ் புத்தாண்டு அன்று மாஸ்டர் படத்தின் டிரைலரை வெகுவாக எதிர்பார்த்தார்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் படக்குழுவினர் பிரச்சனை எல்லாம் முடிந்தபிறகு கண்டிப்பாக மாஸ்டரை கொண்டாடலாம் என சமாதானம் சொல்லி ரசிகர்களை தேத்திவிட்டனர்.

முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ஆண்ட்ரியா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்காக நேரடி ஒளிபரப்பு செய்தார். வழக்கம்போல் ரசிகரின் கேள்விக்கு மாஸ்டர் படத்தின் அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது விஜய் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் இணைந்து ஒரு சேசிங் காட்சி நடித்துள்ளதாகவும், மாஸ்டர் படத்தின் முக்கிய அம்சமாக இருப்பது அந்த சேசிங் தான் எனவும் ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார். இதனால் மாஸ்டர் பற்றி எந்த செய்திகளும் வெளிவராத நிலையில் ஆண்ட்ரியா இந்த செய்தி கூறியிருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top