Connect with us
Cinemapettai

Cinemapettai

andrea-jeremiah-lover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆண்ட்ரியாவை ஏமாற்றிய அரசியல்வாதி.. என்னதான் ஆச்சு! ஒரு வழியாக வாய் திறந்தார்

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் பட்டியலில் மிக முக்கியமான நபர் என்றே கூறலாம். நடனம் ஆடிக்கொண்டே பாடல்களைப் பாடும் மிகச் சிறந்த திறமை பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. சமீப காலங்களாக இவரைப் பற்றிய கிசுகிசு பரவலாக பேசப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கவிதை வரிகளை பாடலாக்கி மேடையில் பாடினார் அதில் முழுமையாக காதல் தோல்வி வரிகளாக இருந்ததாம்.

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற அரசியல் செல்வாக்கு உள்ள நடிகரால் காதலித்து ஏமாற்றப்பட்டார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சில வருடங்களுக்கு முன்பு பிரபல இசையமைப்பாளர் உடன் முத்தமிடும் புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது அரசியல்வாதி பிரச்சனை வேறு. ஆண்ட்ரியாவை ஏமாற்றிய அரசியல்வாதி யார் என்று பலரும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். ஆனால் ஆண்ட்ரியா இதனை முழுமையாக மறுத்துள்ளார். இதற்கு விளக்கமளித்த அவர் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு இலக்கிய விழாவில் எனது தோழி கவிதைகள் எழுதி வெளியிடுமாறு அழைப்பு விடுத்தார்.

அப்பொழுது ஒரு புத்தகத்தில் இருந்த கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன் அது காதல் தோல்விக்கான கவிதை என்று தெரியவந்தது. அவர்கள் காதல் அனுபவத்தைப் பற்றிக் கேட்கும்போது எனது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வியைப் பற்றி கூறினேன். இதனை சில ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு இந்த காதல் தோல்வி பிரபல அரசியல்வாதியுடன் ஏற்பட்டதாக வதந்திகளை வெளியிட்டிருந்தன.

Andrea-Jeremiah

Andrea-Jeremiah

அரசியல் சம்பந்தப்பட்டதாக கிளம்பியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது விளக்கம் அளித்தால் எந்த ஒரு பயனுமில்லை என்று நான் தள்ளி போட்டு விட்டேன். என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட புத்தகத்தை எழுதி உள்ளதாகவும் அது விரைவில் வெளிவரும் என்று அவர் கூறினார்.

இதிலிருந்து ரசிகர்களுக்கு என்ன தெரிகிறது என்றால் இந்த புத்தகத்தை வெளியிட்டு விற்பனை செய்வதற்கான விளம்பரம் என்று புரிகிறது என சிலர் கூறுகின்றனர். சமீபத்தில் பேண்ட் போடாமல் வா வா பக்கம் வா என வீடியோ வெளியிட்ட ஆண்ட்ரியா இவர் செய்யும் வியாபாரம்தான் புரியவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top