Connect with us
Cinemapettai

Cinemapettai

andrea-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகை ஆண்ட்ரியாவுக்கு வந்த அந்த நோய்.. ரகசியமாக சிகிச்சை எடுத்து வந்தது அம்பலம்

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக தற்போது வரை தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு வெற்றி நடைபோட்டு வருபவர் ஆண்ட்ரியா(Andrea Jeremiah).

பெரும்பாலும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரங்கள் ரொமான்டிக் கலந்த கதாபாத்திரங்களாகவே வடிவமைக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஆண்ட்ரியா செலக்ட் செய்து நடிக்கும் படங்கள் அனைத்துமே வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் அடுத்ததாக ஆண்ட்ரியா நடித்துள்ள அரண்மனை 3 படம் வெளியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமானதால் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு மாறி மாறி படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு விஷயத்திலும் கொஞ்சம் அலட்சியமாக இருந்துள்ளார் ஆண்ட்ரியா.

இதன் காரணமாக தற்போது அவருக்கு கொரானோ நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டவுடன் தெரிவிக்காமல் ரகசியமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வரும் நிலையில் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

இதனை பார்த்த ரசிகர்கள் வடிவேலு மீம்ஸ் போட்டு, உங்களையும் விட்டு வைக்கலையா அந்தக் கொரானா குரங்கு என தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாகவும், தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளார்.

andrea-cinemapettai-01

andrea-cinemapettai-01

Continue Reading
To Top