புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஆடையில்லாமல் அந்த நடிகருடன் நடித்தது தான் என்னுடைய தப்பு.. புலம்பும் ஆண்ட்ரியா

ஒரு காலத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ஆண்ட்ரியா சமீபகாலமாக மொக்கைப் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு காரணம் மேலாடை இன்றி ஒரு படத்தில் நடித்ததால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைப்பது இல்லையாம்.

பாடகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் நாயகியாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நம்ம ஆண்ட்ரியா. ஆனால் சமீபத்தில் வந்த மாஸ்டர் திரைப்படம் அவரது மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்து விட்டது உப்பு சப்பில்லாத கதாப்பாத்திரத்தில் நடித்ததால் அடுத்தடுத்த ஆண்ட்ரியாவுக்கு அநியாயத்திற்கு மட்டமான கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

இந்நிலையில் அடுத்ததாக மிஸ்கின் இயக்கும் பிசாசு படத்தை மட்டுமே முழுவதுமாக நம்பி உள்ளாராம். ஆனால் வாய்ப்பில்லாமல் போனதற்கு மாஸ்டர் படம் மட்டுமே காரணம் இல்லையாம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் அமீருடன் இணைந்து மிகவும் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் மேலாடையின்றி நடித்ததற்கு பிறகு பெரும்பாலும் பிட்டு படத்தை விட மோசமான கதாபாத்திரங்களே ஆண்ட்ரியாவுக்கு வந்து கொண்டிருப்பதாக அவரது வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

andrea-cinemapettai
andrea-cinemapettai

இதனால் ஆண்ட்ரியா மிகவும் அப்செட்டில் உள்ளாராம் தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கும் எனக்கே இந்த நிலைமையா என புலம்பித் தள்ளுகிறாராம். அது மட்டுமில்லாமல் அவள் படத்திலும் கொஞ்சம் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனிமேல் தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என உறுதி செய்துள்ளோம் இதற்காக படவாய்ப்புகள் இல்லையென்றாலும் பரவாயில்லை என நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம் ஆண்ட்ரியா.

- Advertisement -

Trending News