fbpx
Connect with us

Cinemapettai

உடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்

கண்டநாள் முதல், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஆண்ட்ரியா. கடைசியாக விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை படங்களில் நடித்தார். அதற்கு பின் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. சிறந்த பாடகியான ஆண்ட்ரியா ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் சில காலம் நடிப்பில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

மன அழுத்தம் மற்றும் உடல்ரீதியான பாதிப்புகள் காரணமாக இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக அப்போது அவர் கூறியிருந்தார்.

இன்னிலையில் நீண்ட காலமாகவே அவர் திரைப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை .இவ்வளவு காலமாக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில்தான் அண்மையில் பெங்களூருவில் கவிதை போட்டி ஒன்று நடந்தது. சிறந்த பாடகி என ஆண்ட்ரியா அறியப்பட்டாலும் கவிதை எழுதுவதிலும் வல்லவர் ஆவார்.

அப்போது முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சோகமான கவிதைகளை வாசித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. முழுக்க முழுக்க சோகமே நிரம்பியிருந்ததாம் அந்த கவிதைத் தொகுப்பில் அதனைக்கேட்ட பார்வையாளர்கள் ஏன் இவ்வளவு சோகம் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, திருமணமான ஒரு நபருடன் நான் தவறான உறவு வைத்திருந்தேன்.

அந்த நபர் என்னை உடலளவில் மிகவும் காயப்படுத்தினார். நான் செய்த தவறால் என் வாழ்க்கையே இருண்டு போய்விட்டது. உடலாளும் மனதாலும் காயப்பட்டிருந்த நான் அந்த துயரத்தில் அடக்க முடியாமல் எழுதிய கவிதைகள் தான் இவை என உருக்கமாக தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top