Connect with us
Cinemapettai

Cinemapettai

குடியரசு தினத்தன்று : ஆந்திராவில் மாணவா்கள் போராட்டம் வெடித்தது..! சென்னையை மிஞ்சுமா..? சந்திராபு நாயுடு அச்சம்..!

Chandrababu-naidu_CinemaPettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குடியரசு தினத்தன்று : ஆந்திராவில் மாணவா்கள் போராட்டம் வெடித்தது..! சென்னையை மிஞ்சுமா..? சந்திராபு நாயுடு அச்சம்..!

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டம், மற்ற மாநிலங்களையும் ஈர்த்துள்ளது.

இதைத்தொடர்ந்து கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களும் தடை செய்யப்பட்டுள்ள தங்களது பாரம்பர்ய விளையாட்டு போட்டிகளுக்கு குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, இன்று விசாகப்பட்டினத்தில்  இளைஞர்கள் பட்டாளம் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்தப் போராட்டத்துக்கு அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் ஆர்.கே. பீச்சில் இன்று அமைதிப் போராட்டம் நடைபெற இருந்தது.

ஆனால், போராட்டத்துக்கு கலந்து கொள்ள வந்தவர்களில் 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது.

அங்கு பல இடங்களில் நேற்று முதலே 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது.

மேலும், தங்களது பிள்ளைகளை போராட்டத்துக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு, பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மெரினாவில் முதன் முதலில் 100க்கும் குறைவானவர்கள்தான் போராட முன் வந்தனர். அவர்களையும் போலீசார் விரட்டி அடித்தனர்.

அதுவே பெரும் தன்னெழுச்சி போராட்டமாக மாறியது. இந்தியாவின் குடியரசு தினத்தில் விசாகப்பட்டினத்தில் போராட்டம் துவங்கியது. இதில் 100 போ கைது செய்யப்பட்டனர்.

இதுவும் பெரும் போராட்டமாக வெடிக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கினறனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top