India | இந்தியா
பெண்களை சீண்டினால் 21 நாளில் தூக்கு.. அதிரடி சட்டத்தை இயற்றிய ஜெகன்மோகன் ரெட்டி
கடந்த சில வருடங்களாகவே நாடெங்கும் பெண் குழந்தைகளை கடத்தி கற்பழித்து கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இதனை மத்திய அரசு கண்டிக்காமல் இருப்பதை இத்தகைய தவறுகளுக்கு காரணமாக அமைகிறது.
மேலும் இது போன்ற தவறுகளுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என பல நாட்களாக கூறி வருகின்றனர். எப்போதும் போல அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மக்களின் பேச்சை கேட்பதாக இல்லை.
அதன் விளைவு சமீபத்தில் தெலுங்கானாவில் பிரியங்கா ரெட்டி என்ற மருத்துவரை கற்பழித்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்திற்கு நாடெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அதிவிரைவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு சட்டம் ஒன்றை இயற்றியுள்ளார். அதாவது பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு 21 நாட்களுக்குள் விசாரணை செய்து தூக்கில் மூடுவதற்கான சட்டத்தை நாளை சட்டசபையில் நிறைவேற்ற உள்ளார்.
இதற்கு ஆந்திர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதுபற்றி ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், நிர்பயா என்ற பெயரிலேயே இந்த சட்டம் இயற்றப்பட இருப்பதாகவும், அந்தப் பெண் கொல்லப்பட்டு ஏழு வருடங்கள் ஆகியும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்காமல் இருப்பதாகவும் குறிப்பிட்டு இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
