Connect with us

Cinemapettai

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ1000 உதவி தொகை: எங்கு தெரியுமா?

Tamil Nadu | தமிழ் நாடு

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ1000 உதவி தொகை: எங்கு தெரியுமா?

அட ஆமாங்க இப்படி ஒரு அறிவிப்பை, நம் பக்கத்துக்கு மாநிலமான ஆந்திரா தான் அறிவித்துள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடை பெற்று வருகின்றது. கடந்த 2014 ல், தேர்தலுக்கு முன் வேலையில்லா பட்டதாரிகளுக்கு, மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதாக, தெலுங்கு தேசம் கட்சி வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு, 35 வயது வரை, மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு செய்வதால் கிட்டத்தட்ட 10 லட்சம் பட்டதாரிகள் பயன் அடைவர். மேலும் அரசுக்கு ஆண்டுக்கு, 1,200 கோடி ரூபாய் செலவு. விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top