Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

இடியாப்ப சிக்கலாய் அமானுஷ்ய திரில்லர்- அந்தகாரம் திரைவிமர்சனம்! இருக்கு ஆனால் இல்லை

அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் என்ற இரண்டு பெர்பாமர்கள். அர்ஜுன் கெத்தாக நடிப்பவர், அவருக்கு இப்படத்தில் பயந்து ஓடி பதுங்கும், பயப்படும் கதாபாத்திரம். தனது பார்வை வாயிலாகவே மிரட்டுபவர் வினோத், அவருக்கு குருடன் கதாபாத்திரம். மனநல நிபுணராக குமார் நடராஜன் தனது பார்வை மற்றும் பேசும் தோணியில் மிரட்டி விடுகிறார். பூஜா ராமசந்திரன் எதற்கு படம் நெடுக என்று யோசிக்கும் நேரத்தில், இந்த மூவரையும் இணைப்பது அவரே.

நெட் பிலிக்ஸ் தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி, இந்திய அளவில் ரீச் பெற்றுள்ள படம் அந்தகாரம். கூடிய விரைவில் உலகளவில் நல்ல பாராட்டை பெரும் இப்படம் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குனர் விக்னராஜன் தனது படத்திற்கு non linear ஸ்டைல் தேர்தெடுத்துள்ளார். இவருக்கு ஒருபுறம் உறுதுணையாக இருப்பது நடிகர்கள் எனில் மறுபுறம் எட்வின் சாகி ஒளிப்பதிவு, பிரதீப் குமார் இசை, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங். இவர்கள் கூட்டணி செம்ம ஸ்ட்ராங்கான டெக்கினிக்கல் காம்போ. இதுவே இந்த சிக்கலான படத்துக்கு மிகப்பெரிய பிளஸ்.

எது நிகழ்காலம், எது முன்பு நடந்தது என புரிந்து கொள்வதே சாமானிய ரசிகனுக்கு சிரமம். 8 மாதம் என பல இடங்களில் குறிப்பிட்டாலும், நிகழ்வின்  மாதம், ஆண்டு என சப் டைட்டில் போட்ருக்கலாம்.  திரை அரங்கில் ரிலீஸ் ஆகியிருந்தால், அவ்வாறு இருந்திருக்கும். நெட் பிலிக்ஸ் பிளாட்பார்ம் எனவே பார்வையாளரின் கற்பனைக்கு என பல விஷயங்கள் உள்ளது.

திரில்லர், சயன்ஸ் பிக்ஷன், ஆத்மா, பேய், மாந்த்ரீகம் என பல விஷயங்களை ஒரே படத்தில் பார்க்க முடியும். 171 நிமிடம் ஓடும் நேரம் உள்ள படம்.  மிதமான வேகத்தில் தான் நகர்கிறது திரைக்கதை, எனினும் நமக்கு சலிப்பு தட்டவில்லை. கடைசி 20 நிமிடம் வரை சஸ்பென்ஸ் முடிச்சியை அவிழ்க்கவில்லை இயக்குனர். நாம் ஊகிப்பதும் கடினமே. அந்தளவுக்கு நேர்த்தியாக எடுத்துள்ளனர்.

எந்த கதாபாத்திரத்திற்கு பெரிதாக விளக்கம் கொடுக்கவில்லை இயக்குனர், இதனை மைனஸ் ஆக கூட நாம் நினைக்கலாம். ஏன் இளம் வயதில் கிரிக்கெட் ஆடுவதை விட்டு கோச்சிங் வந்தார் அர்ஜுன்? தேர்வில் நேர்மை பேசும் வினோத் ஹாஸ்பிடலில் கிட்னி வாங்க லஞ்சம் கொடுப்பது ஏன்? மனோதத்துவ டாக்டர் இப்படி நோயாளிகள் மீது கடுப்பு ஆவது சாத்தியமா ? என பல கேள்விகள் நம்முள் எழும், அதற்கு பதில் கிடையாது.

சாமானிய ரசிகனுக்கு சற்றே சலிப்பை கொடுக்கும் இப்படம், உலக சினிமா ரசிங்கனுக்கு கட்டாயம் புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்த்தியை தரும். OTT தளத்திற்கு ஏற்ற படம். புரியாத பல இடங்கள் வரும் சமயத்தில் அழகாக ரிமோட் வைத்து முன், பின் என எளிது புரிந்துகொள்ள முடிகிறது.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.75 / 5

andhaghaaram

Continue Reading
To Top