Connect with us

Cinemapettai

ஒரு அண்டாவுக்கு இத்தனை அக்கப்போரா.. இணையத்தில் பட்டையைக் கிளப்பும் அண்டாவ காணோம் படத்தின் டிரைலர்

andava-kanom-cinemapettai

Videos | வீடியோக்கள்

ஒரு அண்டாவுக்கு இத்தனை அக்கப்போரா.. இணையத்தில் பட்டையைக் கிளப்பும் அண்டாவ காணோம் படத்தின் டிரைலர்

திமிரு படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஸ்ரேயா ரெட்டி. தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகை ஆவார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் கதையின் நாயகியாக உருவாக இருந்த அண்டாவ காணோம் டீசர் மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பெரிய அளவு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தை தயாரித்த ஜேஎஸ்கே பிலிம் மீடியா பணச் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்தது.

இந்நிலையில் மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது ஜேஎஸ்கே பிலிம் மீடியா அவர்களே உருவாக்கியுள்ள ஜேஎஸ்கே ப்ரைம் மீடியா என்ற தளத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதி அண்டாவ காணோம் படம் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்தப்படம் ஸ்ரேயா ரெட்டி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி விடும் என நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது.

இந்நிலையில் சூர்யா, அண்டாவ காணோம் படத்தின் டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மிகவும் சுவாரசியமாக உள்ள அந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் ஹிட்டடித்துள்ளது.

அண்டாவ காணோம் ட்ரெய்லர்: Click here

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top