உன் சைட்ல ஃபால்ட்ட வச்சுட்டு என்ன ஏன் டா மொறைக்குற.. ஸ்மார்ட்டாக மணிமேகலைக்கு பதில் சொன்ன பிரியங்கா

Priyanka: பிரியங்கா ,மணிமேகலை பிரச்சினை கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. நடந்த பிரச்சனையை சொல்லிவிட்டு ,நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை அமைதியாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு இது பூதாகரமாகி இருக்காது.

மணிமேகலை அடுத்தடுத்து போட்ட வீடியோக்கள் பெரிய அளவில் சர்ச்சையானது .அதே நேரத்தில் மணிமேகலைக்கு ரசிகர்களின் சப்போர்ட் அதிகமாக இருக்கும் நிலையில் ,பிரியங்காவிற்கு முழுக்க முழுக்க விஜய் டிவியை சேர்ந்த ஆர்டிஸ்ட்டுகள் ஆதரவு அளிக்க ஆரம்பித்தனர் .

இதில் குரேஷி மற்றும் ஷகிலா நேருக்கு நேராகவே மணிமேகலை மீது சில குற்றச்சாட்டுகள் வைத்தார்கள். ஆனால் இதுவரைக்கும் பிரியங்கா தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை .இந்த நிலையில் பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஸ்மார்ட்டாக மணிமேகலைக்கு பதில் சொன்ன பிரியங்கா

இந்த ப்ரோமோவின் தொடக்கத்திலேயே ஜெயம் ரவியின் நடித்த பிரதர் படத்தின் மக்கா மிஷின் பாடலை ஒளிபரப்பு இருக்கிறார்கள் .அதுமட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் பிரியங்காவை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவது போல் அந்தப் புரோமோ வீடியோ அமைந்திருக்கிறது.

அதிலும் நடிகர் பால சரவணன் இனி எத்தனை வருஷம் ஆனாலும் நீ தான் விஜய் டிவியோட பெஸ்ட் ஆங்கர் என சொல்லி இருக்கிறார். இந்தப் புரோமோவில் பிரியங்காவின் ஆட்டிட்யூட் அத்தனையுமே மணிமேகலையின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுவது போல் தான் இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் நீ என்ன வேணா பேசிட்டு போ நான் என் வேலையை பார்க்கிறேன் என்று பிரியங்கா சொல்லாமல் சொன்னது போல் அமைந்திருக்கிறது .அது மட்டும் இல்லாமல் மணிமேகலைக்கு எதிராக ரசிகர்களை திருப்புவதற்காக விஜய் டிவி செய்த விஷயம் தான் இந்த புரோமோ வீடியோ என்றும் நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் .

மணிமேகலை முதன்முதலில் தனக்கு நடந்த பிரச்சினையை பற்றி பேசும்போது அவருக்கு அமோக ஆதரவு இருந்தது நிதர்சனமான உண்மை. ஆனால் அதற்கு அடுத்து அவர் போட்ட வீடியோ ,சொம்புக்கெல்லாம் என்ன மரியாதை என்று பேசிய பேச்சு மக்கள் சிலரைக்கு வேறுபடையும் விதமாக அமைந்தது.

எந்த பிரச்சினையிலுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத மா கா பா ஆனந்த் மணிமேகலையின் இந்த வீடியோவுக்கு பிறகு செருப்பு வைத்து instagram ஸ்டோரி போட்டது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -spot_img

Trending News