Connect with us

Cinemapettai

வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என கண்கலங்கிய தொகுப்பாளினி பிரியங்கா.. உங்களுக்கு நல்ல மனசு மேடம்

priyanka-deshpande

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என கண்கலங்கிய தொகுப்பாளினி பிரியங்கா.. உங்களுக்கு நல்ல மனசு மேடம்

டிடிக்கு பிறகு பிரபல தொலைக்காட்சியில் அதிகம் விரும்பப்படும் பெண் தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகுந்த வருத்தத்துடன் கூடிய நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கண்கலங்கி உள்ளார் .

பிரியங்கா தற்போது பிரபல தொலைக்காட்சியில் த வால்(The Wall) என்ற கேம்ஷோ ஒன்றை மற்றொரு தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் உடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் வெளியான எபிசோடில் 33 வருடங்களாக கஷ்டத்தை மட்டுமே பார்த்த பெண்மணி கிட்டதட்ட 60 லட்சம் மதிப்புள்ள பணத்தை வென்று சென்றது பார்த்த ரசிகர்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போதே பிரியங்கா கதறி அழுதுள்ளார். இந்த சம்பவத்தை தான் வாழ்க்கையில் மறக்க முடியாது என தனது ட்விட்டர் பக்கத்தில் கண்ணீருடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top