fbpx
Connect with us

Cinemapettai

டிடி வெளியிட்ட புகைப்படம்.. கண்கலங்கிய ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிடி வெளியிட்ட புகைப்படம்.. கண்கலங்கிய ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நீண்ட நாட்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை வரலாற்றில் சரித்திரம் படைத்தவர். சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் அவ்வப்போது நச்சென்று கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

இவர் தொகுப்பாளினியாக இருக்கும் ஷோக்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றே சொல்லலாம். மக்களின் ஃபேவரிட் தொகுப்பாளனி. மக்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா நாயகர், நாயகிகளுக்கும் பிடித்தமான தொகுப்பாளனி ஆவார்.

இந்நிலையில் சமீபத்தில் டிடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் காலில் அடிபட்டவர்கள் நடப்பதற்காக பயன்படுத்தப்படும் ஸ்டிக் ஒன்றை வைத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

இதனால் அவர் அடிபட்டு இருக்கலாம் எனக் கருதும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து தங்களது சோகத்தையும் ஆறுதல் வார்த்தைகளையும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் ஆனந்தக் கண்ணீரில் தவித்து வருகிறார் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

dd-latest-photo

dd-latest-photo

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top