Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் வாழ்நாளில் இவரை மட்டும் பேட்டி எடுக்கவே கூடாது.. கதறும் டிடி
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தனது வசீகரத் தோற்றத்தாலும் நகைச்சுவை கலந்த பேச்சாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.
இன்று பல தொகுப்பாளர்களுக்கு இவர் ஒரு ரோல் மாடலாக விளங்குகிறார். ஒரு நிகழ்ச்சியை எப்படி தொடங்கி எவ்வாறு சுவாரஸ்யமாக கொண்டுபோய் எந்தவாறு முடிக்க வேண்டும் என அனைத்திலும் கைதேர்ந்தவர்.
ஆனால் டிடி பேட்டி எடுக்க பயந்த நபர் யார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இயக்குனர் மிஷ்கினை ஒரு தடவை பேட்டி எடுக்கும்போது தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், பேட்டி இல்லாத நேரங்களில் மிகவும் அன்பாகவும், பேட்டி எடுக்கும்போது மிகவும் சீரியஸாக தனது முக பாவனைகளை வைத்துக் கொள்வார்.
இதனால் தான் மிகவும் பயந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இனி வாழ்நாளில் மிஷ்கினை மட்டும் பேட்டி எடுக்க மாட்டேன் என உறுதி எடுத்துள்ளாராம் டிடி.
