fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜோஸ்வா படத்தில் ஆக்சனில் மிரட்டும் டிடி.. ஒன் மில்லியனை தாண்டி எதிர்பார்ப்பை கிளப்பிய ட்ரெய்லர்

Joshuva

Videos | வீடியோக்கள்

ஜோஸ்வா படத்தில் ஆக்சனில் மிரட்டும் டிடி.. ஒன் மில்லியனை தாண்டி எதிர்பார்ப்பை கிளப்பிய ட்ரெய்லர்

தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. சின்னத்திரையில் எத்தனை தொகுப்பாளர்கள் வந்தாலும் ஒரு சில தொகுப்பாளர்கள் தான் மக்களிடம் இன்றும் பிரபலமாக இருக்கின்றனர்.

அந்த வரிசையில் சின்னத்திரையில் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதிலும் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம், விவாகரத்து என்று பல சிக்கலில் சிக்கித் தவித்த டிடி தற்போது தன்னுடைய வாழ்க்கையை உற்சாகமாகவும், ஜாலியாகவும் கழித்து வருகிறார்.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாது சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவான பவர் பாண்டி திரைப்படத்தில் டி டி நடிகை ரேவதிக்கு மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

அந்தப் படத்தை தொடர்ந்து இவர் தற்போது துருவ நட்சத்திரம், ஜோஸ்வா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஜோஸ்வா திரைப்படத்தின் டிரைலர் நேற்று கமல்ஹாசன் முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

கௌதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் வருண், கிருஷ்ணா, யோகிபாபு, டிடி உட்பட பலர் நடித்துள்ளனர். அதில் டிடி போலீஸ் அதிகாரியாக மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அந்த ட்ரெய்லரின் ஒரு காட்சியில் டிடி துப்பாக்கியை எடுத்து எதிரிகளை மிரட்டுவது போல் இருக்கும்.

சின்னத்திரை நிகழ்ச்சியில் சிரிப்புடன் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் டிடி அந்த காட்சியில் மிகவும் மிரட்டலாக நடித்திருக்கிறார். அந்த டிரைலருக்கு தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும்  அதிகரித்துள்ளது. இப்படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top