Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சர்கார் ஃபர்ஸ்ட் லுக் – தளபதி விஜய் / ரசிகர்களை சீண்டிப்பார்க்கும் அன்புமணி ராமதாஸ்.

தளபதி 62

‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 மெகா ஹிட் படங்களுக்கு பின் மீண்டும் விஜய் மற்றும் முருகதாஸ் இணையும் படம். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு . ரஹ்மான் இசை என பிரம்மாண்ட கூட்டணியில் இப்படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருகின்றது.

ஜூன் 22 தன் 44 வயதில் தடம் பதிக்கவுள்ளார். எனவே இவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று மாலை படத்தின் தலைப்பு “சர்க்கார்” என்று அறிவித்தனர், மேலும் முதல் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர்.

Sarkar

சர்க்கார் விஜய் ஸ்டைலிஷ் தாடி, கூலர்ஸ், சிகரெட் என மாஸ் மற்றும் க்ளாஸ் இரண்டு கலந்து மிகவும் அசத்தலாக வந்துள்ளது. ட்விட்டரில் தற்பொழுதைய ட்ரெண்டிங் இந்த படம் தான்.

அன்புமணி ராமதாஸ்

டாக்டர் என்பதாலேயோ என்னவோ மக்கள் மேல் உள்ள அக்கரையில், புகையிலை மற்றும் குடிப்பழக்கத்திற்கு எதிராகவே இருந்தவர். இவர் அமைச்சராக இருந்தபோது, பொது இடங்களிலும், புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது. சிகரெட், புகையிலைப் பொருள்களை சிறுவர்களுக்குப் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் விற்பது என்பவை தடை செய்யப்பட்டது. திரையில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளுக்கு கடுமையான தணிக்கைநெறிகளைக் கொண்டு வந்தார்.

anbumani

தற்பொழுது விஜய் புகைப்பிடிப்பது போல் வெளியான சர்கார் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புகைப்பிடிப்பதை விஜய் ஊக்கப்படுத்துவது போல் உள்ளது வெட்கப்படவேண்டிய செயல் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சிகரெட் இல்லாமல் கூட நீங்கள் இன்னும் ஸ்டைலாக இருப்பீர்கள் என தெரிவித்துள்ளார். மேலும்

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top