ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

சிங்கப்பெண்ணில் ஆனந்தியிடம் மகேஷை பற்றி மனம் திறந்த அன்பு.. அழகன் யாரென்று தெரிந்து கொள்ள கிடைத்த கடைசி துருப்பு சீட்டு!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நேற்றைய எபிசோடில் ஆனந்தியின் செல்போன் அன்புவின் அம்மா கையில் கிடைத்ததுமே ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டது.

போதாத குறைக்க காயத்ரி ஆனந்தியின் நம்பருக்கு போன் பண்ணவும் அன்புவின் அம்மா அந்த போனை எடுத்து விடுகிறார். ஹலோ என்று சொன்ன காயத்ரி அன்புவின் அம்மா குரலை கேட்டதும் போனை கட் பண்ணி விடுகிறாள்.

இது அன்புவின் அம்மாவுக்கு பெரிய சந்தேகத்தை கொடுக்கிறது. ஒருவேளை அன்பு யாரையோ காதலிக்கிறானோ, அந்த பெண்ணிடம் பேச தான் இந்த போனை தனியாக வைத்திருக்கிறானோ என்ற அளவுக்கு யோசிக்கிறார்.

அழகன் யாரென்று தெரிந்து கொள்ள கிடைத்த கடைசி துருப்பு சீட்டு!

அதே நேரத்தில் ஆனந்தி மகேஷிடம் அன்பு ராஜினாமா பண்ணியதை சொல்லி விடுகிறாள். உடனே மகேஷ் அன்பு வை நேரில் அழைத்து பேசுகிறான். அப்போது அன்பு தன்னுடைய காதல் தோல்வியை பற்றியும் சொல்கிறான்.

தான் காதலிக்கும் பெண்ணை இன்னொருவர் காதலிப்பதாகவும், அவருடன் வாழ்ந்தால் கண்டிப்பாக அந்த பெண் சந்தோஷமாக இருப்பாள் எனவும் கூறுகிறான். இதனால் கோபமடைந்த மகேஷ் அந்தப் பெண்ணின் மனதில் யார் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள், அதை விட்டுவிட்டு அந்த பெண் அவருடன் தான் வாழ வேண்டும் என எப்படி நீ சொல்லலாம் என கேட்கிறான்.

கண்டிப்பாக ஆனந்தி முழுக்க முழுக்க அன்பு வைத்தான் காதலிக்கிறாள் என மகேஷுக்கு தெரிய வரும் பொழுது கண்டிப்பாக இப்படி ஒரு நல்ல முடிவை அவன் எடுக்க வாய்ப்பு இருப்பது இதிலிருந்து தெரிகிறது. மேலும் அன்பு வை கம்பெனியில் மீண்டும் வந்து சேருமாறும் அழைக்கிறான்.

தான் வேலையை ராஜினாமா பண்ணியதை மகேஷிடம் ஆனந்தி தான் சொல்லி இருப்பாள் என அன்புக்கு தெரிந்து விடுகிறது. இதனால் ஆனந்தியிடம் கொஞ்சம் கோபமாகவே பேசுகிறான். ஒரு வழியாக அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் வீடு வந்து சேர்கிறார்கள்.

சரியாக ஆனந்தி மற்றும் அன்பு ரூமுக்குள் இருக்கும் பொழுது அன்புவின் அம்மா வந்து வேகமாக கதவை தட்டுகிறார். ஆனந்தியை பாத்ரூமுக்குள் மறைந்திருக்குமாறு சொல்லிவிட்டு அன்பு கதவை திறக்கிறான். அப்போது அன்புவின் அம்மா இந்த போனை பற்றி கேட்கிறார்.

அன்பு என்ன சொல்வது என்று தெரியாமல் திருத்திரு என முழித்துக் கொண்டிருக்கிறான். அன்பு பின் தர்ம சங்கடமான நிலைமையை புரிந்து கொண்டு ஆனந்தி இணையும் பொறுத்து இருக்கக் கூடாது வெளியில் போய் நடந்த உண்மையை சொல்லிவிடலாம் என வருகிறாள்.

அத்தோடு நேற்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது. இன்றைய ப்ரோமோவில் காயத்ரி அந்த நேரத்தில் வீட்டிற்குள் வந்து அந்த போன் தன்னுடையது தான் என சொல்கிறாள். இந்த போன் உன்னுடையது தான் என்பதை எப்படி நான் நம்புவது என அன்புவின் அம்மா கேள்வி கேட்கிறார்.

மேலும் மகேஷின் அம்மா ஆனந்தி கம்பெனியில் வேலை பார்க்க கூடாது என சொல்கிறார். அதற்கு மகேஷ் ஆனந்தி கம்பெனியில் இருக்கக் கூடாது என்றால், நானும் இருக்க மாட்டேன் என சொல்கிறான். இது மகேஷின் அம்மாவுக்கு ரொம்பவும் அதிர்ச்சியை கொடுக்கிறது.

மேலும் தன்னால் அன்பு கஷ்டப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆனந்தி இங்கு இருந்து நான் கிளம்பி விடுகிறேன் என சொல்கிறாள். அதற்கு அன்பு இதுதான் நீங்கள் என் மீது மற்றும் மகேஷ் மீது வைத்திருக்கும் மரியாதையா என கேட்டு ஆனந்தியின் மனதை மாற்றுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

இந்த முக்கோண காதல் கதை இப்படியே மாற்றி மாற்றி நடந்து வருவது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. நேற்றைக்கு முந்தின நாள் எபிசோடு இல் ஆட்டோக்காரர் ஒருவரை காட்டியிருப்பார்கள். அவருக்குத்தான் அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் கதை தெரியும்.

ஒரு வேளை அவர் ஆனந்தியை என்றால் என்றைக்காவது பார்த்து இந்த பையன் தான் அன்னைக்கு உன்னுடைய சம்பள தவறை தேடி கொடுத்தது என்று சொன்னால், கண்டிப்பாக ஆனந்திக்கு அன்பு தான் அழகன் என்று தெரிந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் நடக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News