Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி, அன்பு மற்றும் மகேஷ் சவரக்கோட்டையில் இருந்து சென்னை வந்ததிலிருந்து அவர்களுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்தான்.
மகேஷின் அப்பாவுக்கு அவன் மீது இருந்த நம்பிக்கையை மொத்தமாக போய்விட்டது. இனி கார்மெண்ட்ஸ் பக்கமே நீ போகக் கூடாது என்று சொல்லி அவனுடைய அறையிலேயே உட்கார வைத்து விட்டார். அதே நேரத்தில் அன்பு விடம் இருந்த பவரை மொத்தமாக கருணாகரன் பிடுங்கி விட்டான்.
அன்புவால் எதுவுமே கேள்வி கேட்க முடியாத சூழ்நிலையில் ஆனந்தியை கருணாகரன் டார்ச்சர் செய்ய ஆரம்பிக்கிறான். போதாத குறைக்கு ஆனந்தியை சந்திக்க முடியாத சூழலில் தன்னுடைய காதலை பற்றி சொல்லுமாறு அன்பு விடம் மகேஷ் கேட்டுக்கொள்கிறான்.
அது மட்டும் இல்லாமல் ஆனந்திக்கு கிப்ட் வாங்கி கொடுப்பது, ஹாஸ்டலில் போய் பார்ப்பது என தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்குகிறான். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அழகனாக ஆனந்தியின் மனதை மாற்றுவேன் என அன்பு முடிவெடுத்து இருக்கிறான்.
ஆனந்திக்கு வர போகும் சிக்கல்
மகேஷ் மற்றும் வார்டனின் பின்னணியில் இருக்கும் கதையையும் அடிக்கடி காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர். அன்பு அவனுடைய அம்மாவிடம் ஆனந்தியின் சொந்த ஊருக்கு செல்வதாக சொல்லாமல் பொய் சொல்லிவிட்டு தான் சென்று இருந்தான்.
தற்போது இந்த உண்மை எப்படியோ அன்புவின் அம்மாவுக்கு தெரிந்து விட்டது. ரொம்பவும் கோபமாக அன்புவை அவனுடைய அம்மா விசாரிக்கிறார். என்னதான் ஆனந்தியின் மீது இருந்த கோபம் அன்புவின் அம்மாவுக்கு போய் விட்டாலும் தன்னுடைய உறவுக்கார பெண்ணை தான் அன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார்.
கிராமத்தில் ஆனந்தியின் அப்பா கொடுக்க வேண்டிய 10 லட்சத்திற்கு சுயம்புலிங்கம் கெடுவைத்து விடுகிறான். இன்னும் நாலு நாளில் அந்த பணத்தை கொடுக்கவில்லை என்றால் இந்த இடத்தை என் மீது எழுதிக் கொடுத்து விடுங்கள் என மிரட்டுகிறான்.
இந்த பிரச்சனையை ஆனந்தி எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என தெரியவில்லை. ஆனந்தியின் அண்ணன் வேலு நினைத்தால் இந்த பிரச்சனையை முடித்து விடலாம். ஆனால் அவனுடைய மனைவி வாணி இந்த நகையை நீ உன் வீட்டுக்கு கொண்டு போய் கொடுத்தாள் நான் இறந்து விடுவேன் என மிரட்டி இருக்கிறாள்.
இந்த பத்து லட்ச ரூபாய் பெரிய பிரச்சனையாகி அது மகேஷுக்கு தெரிந்தால் கண்டிப்பாக அவன் அந்த பணத்தை கொடுத்து விடுவான். அவன் பெண் கேட்டாலும் ஆனந்தியின் அப்பா மறுப்ப தெரிவிக்க மாட்டார்.
அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பண பிரச்சனையால் அன்புவின் காதலுக்கு பிரச்சனை ஏற்பட ரொம்பவே வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.
சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- அன்பு வாழ்க்கையை புரட்டி போட்ட 2 சம்பவங்கள்
- சிங்கப்பெண்ணில் போட்ட திட்டத்தை நிறைவேற்ற போகும் சுயம்புலிங்கம், மித்ரா
- சிங்கப்பெண்ணில் காதல் ஆட்டத்தில் இருந்து விலகும் மகேஷ், ஆபத்தை நெருங்கும் ஆனந்தி
- சிங்கப்பெண்ணில் ஆனந்திக்கு ஏற்பட போகும் அசிங்கம்