Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த வார எபிசோடுகள் ரசிகர்களை அதிருப்தியை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வெறுப்புக்கெல்லாம் உச்சகட்டமாக இருக்கிறது.
சிங்கப்பெண்ணே என்பதை தாண்டி அன்பு என்ற ஒரு கேரக்டருக்காக தான் இந்த சீரியலுக்கு இப்போதைக்கு ரசிகர்கள். அன்பு தான் அழகன் என்று எப்போது ஆனந்தி தெரிந்து கொள்வது தான் இப்போதைக்கு ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு.
அன்புவும் கடந்த வாரம் முழுக்க லவ் மூடில் வந்து அசத்தியிருந்தான். அன்பு கொஞ்சம் சிரிச்சா கூட ஆனந்தி மூலமா ஏதாவது ஒரு பிரச்சனை அவனுக்கு வந்து விடுகிறது. அப்படி ஆனந்திக்கு வந்த பண பிரச்சனையால் அன்புவின் வாழ்க்கையில் பெரிய புயல் அடித்திருக்கிறது.
மீண்டும் முட்டாள் வேலை பார்க்கும் ஆனந்தி
ஆனந்தியின் பண பிரச்சனையை போக்க அன்பு தனக்கு தெரிந்த எல்லா வழிகளிலும் போராடினான். எதுவுமே கை கொடுக்காமல் இறுதியாக மகேஷ் கொடுத்த 10 லட்சம் தான் ஆனந்தியின் பிரச்னையை தீர்த்தது. அது மாட்டும் இல்லாமல் அன்புவின் அம்மா அவனை கலயாணத்திற்கு வற்புறுத்துகிறார்.
தன்னிடம் பேசினால் ஆனந்திக்கு சந்தோசமான வாழ்க்கை அமையாது என அன்பு முடிவெடுக்கிறான். ஆனந்தி மகேஷிடம் இருந்தால் மட்டுமே அவளுடைய குடும்ப கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கும் அன்பு ஆனந்தியை விட்டு விலகுவது போல் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அன்புவின் இந்த திடீர் இடைவெளி ஆனந்திக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அழகன் என்ற மாய பிம்பத்தை தாண்டி ஆனந்தி அன்பு தான் தனக்கு எல்லாமே என்பதை உணர்ந்து அவனிடம் வருகிறாளா என்று பார்க்கலாம்.
சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- ஒரே நேரத்தில் அன்பு மற்றும் ஆனந்திக்கு ஸ்கெட்ச் போட்ட மித்ரா
- நேருக்கு நேர் மோதும் அன்பு, மகேஷ்
- முக்கிய முடிவெடுக்கும் தருவாயில் ஆனந்தி