புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிங்கப்பெண்ணில் அழகன் யாரென்று சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் அன்பு.. ஆனந்தியை மன்னிப்பானா மகேஷ்?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. என்னதான் அன்பு ஆனந்தியை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆனந்தியை அவனோடு சேர்த்துக் கொண்டே இருக்கிறது.

இனி உன் முன்னாடியே வரமாட்டேன் என்று சொல்லிய அன்புவின் மனசாட்சியான அழகன் கேரக்டரை மீண்டும் தோண்டி எடுத்து இருக்கிறாள் மித்ரா. ஆனந்திக்கு கெட்டது செய்ய முடிவு எடுத்து மித்ரா செய்த இந்த விஷயத்தால் அன்பு மற்றும் ஆனந்தியின் காதல்தான் கைகூடப்போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனந்தியை மன்னிப்பானா மகேஷ்?

மகேஷுக்கு அழகன் கேரக்டரை சுத்தமாக பிடிக்காது, அந்த அழகன் தான் அன்பு என நம்ப வைக்க வேண்டும் என்று நேற்று மித்ரா ஒரு பார்சல் ஒன்றை ஆனந்திக்கு அனுப்புகிறாள். அழகன் என்று பெயரிடப்பட்டிருக்கும் பார்சலை மகேஷ் பார்த்து ரொம்பவை கொதித்து போகிறான்.

உடனே மித்ராவிடம் சென்று எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அதுவே நடந்து விட்டது, இந்த பார்சலை நான் ஆனந்த இடம் கொடுக்கப் போவதில்லை என்று சொல்கிறான். உடனே மித்ரா நீ இந்த பார்சலை ஆனந்தியிடம் கொடுத்து அனுப்பிவிடு, அப்போதுதான் நம்மால் அழகன் யார் என கண்டுபிடிக்க முடியும் என்று சொல்கிறாள்.

மித்ரா திட்டமிட்டபடி அழகன் என்ற பெயர் போட்ட பார்சல் ஆனந்தியின் கைக்கு போகிறது. உடனே வேகமாக மொட்டை மாடிக்கு சென்று அந்த பார்சலை திறந்து பார்க்கிறாள். அதில் அழகனின் கையெழுத்தில் ஒரு கடிதம் இருக்கிறது.

தோண்டி புதைக்கப்பட்ட காதலை மீண்டும் துளிர்க்க வைக்கும் விதமாக அதில் எழுதப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் மகேஷ் ஆனந்தியிடம் அங்கு வந்து இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்கிறான். உடனே ஆனந்தி அழகனின் கடிதம் பற்றிய சொல்லாமல் பொய் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறாள்.

இது மகேஷுக்கு ரொம்ப கோபத்தை கொடுக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்சல் வந்த கம்பெனிக்கு நேரடியாக செல்கிறாள் ஆனந்தி. இந்த பார்சலை அனுப்பியது யார் என அந்த கம்பெனியில் விசாரிப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் ஆனந்தியை கம்பெனியில் பார்க்க வரும் அன்பு விடம் முத்து ஆனந்தி இங்கே இல்லை என்று சொல்கிறான். இது அன்புக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது.

ஒருவேளை இனி வரும் எபிசோடுகளில் அழகன் எழுதிய கடிதத்தை பற்றி ஆனந்தி அன்பு விடம் சொன்னால் அது அன்புக்கு பேரதிர்ச்சியாக இருக்கும். மீண்டும் ஆனந்தி எந்த ஒரு போலி அழகனையும் கண்டு ஏமாந்து விடக்கூடாது என்பதால் அன்பு உண்மையை சொல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. அழகன் யார் என ஆனந்தி தெரிந்து கொள்கிறாளா, அடுத்த கட்டமாக மகேஷின் முடிவு என்னவாக இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News