சிங்கப்பெண்ணில் அன்பு வாழ்க்கையை புரட்டி போட்ட 2 சம்பவங்கள்.. மகேஷின் காதலை ஏற்று கொள்வாளா ஆனந்தி?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலை நேயர்கள் விரும்பி பார்ப்பதற்கு ஒரே காரணம் அன்பு தான். என்னதான் ஆனந்தி கேரக்டர் மீது ரசிகர்களுக்கு அதிருப்தி இருந்தாலும் அன்புக்காக, இவர்களது காதல் சேர வேண்டும் என்று இந்த சீரியலை பார்த்து வருகிறார்கள்.

ஆனால் நேற்றிலிருந்து அன்பு வை கலங்கடித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் சீரியலின் இயக்குனர். கிட்டத்தட்ட பல மாதங்களாக நான்தான் அழகன் என சொல்ல துடித்துக் கொண்டிருந்தான் அன்பு.

நடுவில் போலியான அழகன் உள்ளே வந்து எக்கச்சக்க பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகு அழகன் மற்றும் ஆனந்திக்கான தொடர்பு மொத்தமாக துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அன்புடன் ஆனந்தி நெருக்கமாக பழக ஆரம்பித்தாள்.

தற்போது தீமிதி திருவிழாவுக்காக ஆனந்தியின் சொந்த ஊருக்கு சென்ற ஆண்டு நான் தான் அழகன் என்று சொல்ல பலமுறை முயற்சி செய்தான். அன்பு காதலை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் மகேஷ் ஆனந்தியை திருமணம் செய்யவே முயற்சி எடுக்க ஆரம்பித்து விட்டான்.

அன்பு வாழ்க்கையை புரட்டி போட்ட 2 சம்பவங்கள்

நேற்று கொள்ளையர்கள் ஆனந்தியை உயிரோடு மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து மகேஷ் மற்றும் அன்பு இருவரும் இணைந்து ஆனந்தியை காப்பாற்றினார்கள். ஆனந்தியை தோள் மீது தூக்கிப் போட்டுக் கொண்டு அன்பு அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என துடித்துக் கொண்டு காட்டில் இருந்து வெளியேறினான்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக மகேஷ் ஆனந்தியை திருமணம் செய்ய தான் திட்டமிட்டிருந்ததை சொல்லி அழுகிறான். அதுமட்டுமில்லாமல் ஆமாம் அன்பே நான் காதலிக்கும் பெண்ணின் ஆனந்தி தான் என்று சொல்கிறான்.

இது அன்புவின் தலையில் இடியை இறக்கியது போல் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் மகேஷ் என் வாழ்க்கையில் ஆனந்தி இல்லை என்றால் நான் செத்துப் போய் விடுவேன் என பேச ஆரம்பிக்கிறான். அன்புக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அதே நேரத்தில் ஆனந்தியை காப்பாற்ற மருத்துவர் வீட்டிற்கு ஓடுகிறான்.

ஆனந்தியை மருத்துவர் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவருடைய வீட்டின் வெளியில் மகேஷ் மற்றும் அன்பு இருவரும் அமர்கிறார்கள். அப்போது மகேஷ் தன்னுடைய காதல் கதை மொத்தத்தையும் எடுத்து விடுகிறான்.

இது அன்புக்கு பேரதிர்ச்சியை கொடுக்கிறது. எது எப்படியோ மகேஷ்காக அன்பு தன்னுடைய காதலை தியாகம் செய்வது போல் அடுத்த கட்ட சீரியல் நகர இருப்பது நன்றாக தெரிகிறது. அதே நேரத்தில் கம்பெனியில் கருணாகரன் மற்றும் அரவிந்த் இருவரும் இணைந்து மகேஷ், ப்ரொடக்சன் டிபார்ட்மென்டை அன்புவை பார்க்க சொன்ன பிறகு எக்கச்சக்க பிரச்சனை வருவதாக ஏத்தி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ஆனந்தி மீதான அழகான காதல் அழியும் நிலையில் இருக்கும் பொழுது, கம்பெனியிலும் அன்புக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விட்டார்கள். இதில் இரண்டில் இருந்து அன்பு எப்படி வெளியே வரப் போகிறான், ஆனந்தி தன்னுடைய அழகனுக்காக காத்திருக்க போகிறாளா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Story

- Advertisement -