வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சிங்கப்பெண்ணில் கடைசி நேரத்தில் மனம் மாறும் அன்பு.. மகேஷுக்கு ரிவீட் அடிக்க போகும் ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் நாளைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷ் ஆனந்தி மீது அதிக காதலை வைத்திருக்கும் வரை அவனுடைய கேரக்டர் ரசிக்க நன்றாக இருந்தது. ஆனால் ஆனந்தி உறுதி உறுதி காதலிக்கும் அழகன் தான் அன்பு என தெரிந்த பிறகு மகேஷ் நடந்துகொள்ளும் விதம் எல்லோருக்குமே எரிச்சலை கொடுக்கிறது.

அன்பு வெளிநாட்டிற்கு போய்விட்டால் ஆனந்தி நமக்கு கிடைத்து விடுவாள் என்ற எண்ணத்தில் மகேஷ் மிருகமாக நடந்து கொள்கிறான். இத்தனை காலமாக நண்பனாக பழகிய அன்பு விடம் கடந்த இரண்டு எபிசோடுகளாக மகேஷ் நடந்துகொள்ளும் விதம் வெறுப்பை தான் கொடுக்கிறது.

மகேஷுக்கு ரிவீட் அடிக்க போகும் ஆனந்தி

நேற்றைய எபிசோடில் ஆனந்தியை பைக்கில் கூட்டிக்கொண்டு வந்து அன்பு மகேஷ் நிற்கும் கார் பக்கம் இறக்கி விடுவான். சாரி சார் லேட் ஆயிடுச்சு என அன்பு சொல்ல அவன் முகத்தைக் கூட மகேஷ் பார்க்க மாட்டான்.

ஏற்கனவே ஆனந்தியை பிரிந்து போகும் வழியை அன்புவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. போதாத குறைக்கு மகேஷின் இந்த மன மாற்றமும் அன்புக்கு பெரிய சங்கடத்தை கொடுத்திருக்கிறது. இன்று வெளியாகியிருக்கும் புரோமோவில் அன்பு சம்பந்தப்பட்ட பொருட்களை ஆனந்தி கையில் பார்த்துவிட்டு கோபத்தோடு மகேஷ் அதை தூக்கி ரோட்டில் அடிக்கிறான்.

ஆனந்தி அழுது கொண்டே அது எல்லாத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறாள். இதை அன்பு தூரத்திலிருந்து பார்க்கிறான். ஆனந்திக்கு ஒரு கஷ்டம் என்றால் அன்புவால் தாங்கிக் கொள்ளவே முடியாது. மகேஷ் ஆனந்தியை சந்தோஷமாக பார்த்துக் கொள்ளுவான் என்ற நம்பிக்கையில் தான் அன்பு தன்னுடைய காதலையே தூக்கி எறிகிறான்.

ஆனால் மகேஷால் ஆனந்தி காயப்படுவதை நேரில் பார்த்த பிறகு கண்டிப்பாக அன்பு வெளிநாட்டிற்கு போக நினைக்க மாட்டான். மகேஷ் பண்ணு சித்து வேலையெல்லாம் தெரிந்தால் ஆனந்தி அவனை ஓட விட்டு விடுவாள். அன்பு தன்னுடைய முடிவை எப்படி மாற்றிக் கொள்கிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News