Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் முழுக்க காதல் போட்டி தான். ஆனந்தியிடம் முதலில் காதலை யார் சொல்வது என மறைமுகமாக அன்பு மற்றும் மகேஷ் இருவருக்கும் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.
தன்னுடைய கம்பெனிக்கு ஒரு கோடி நஷ்டம் அடைந்ததை நினைத்து மகேசும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. தனது கொடுக்கப்பட்ட பவர் மீண்டும் பறிக்கப்பட்டதை நினைத்து அன்பும் கவலைப்படுவதாய் இல்லை.
நேற்றைய எபிசோடு ஆனந்தி மகேஷுக்கு காபி கொண்டு செல்வதை பார்த்த கருணாகரன் அவளை கூப்பிட்டு எங்கே போகிறாய் என்று கேட்கிறான். மகேஷுக்கு காபி கொண்டு போகிறேன் என ஆனந்தி சொன்னதும் அந்த காபி கப்பையே தட்டி விடுகிறான்.
போட்டா போட்டி போடும் அன்பு, மகேஷ்
இனி என்னுடைய அனுமதி இல்லாமல் மகேசின் ரூமுக்கு நீ செல்லக்கூடாது என உத்தரவிடுகிறான். இதை பார்த்த அன்புவுக்கு கோவம் மூக்கு மேல் வருகிறது ஆனால் கருணாகரனை எதிர்த்து அவனால் எதுவுமே பண்ண முடியவில்லை.
உணவு இடைவெளியின் போது முத்து, அன்பு, ஆனந்தி, ஜெயந்தி நான்கு பேரும் மகேசை சந்திக்கிறார்கள். அப்போ காலையில் நடந்த சம்பவத்தை பற்றி முத்து மகேஷிடம் சொல்கிறான். மேலும் ஜெயந்தி கருணாகரனை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.
இவ்வளவு நாள் உங்களுக்கு பயந்து தான் எங்களிடம் வராமல் இருந்தான். இனி அவனுடைய ஆட்டம் ரொம்பவும் மோசமாக இருக்கும் என சொல்கிறாள் ஜெயந்தி. மேலும் அன்பு மகேஷிடம் என்னதான் நடந்தது ஏன் கம்பெனியில் இவ்வளவு மாற்றம் என கேட்கிறான் அப்போது மகேஷ் கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பற்றி சொல்கிறான்.
எல்லோரும் சாதாரணமாக பேசி முடித்துவிட்டு கீழே செல்லும் பொழுது மகேஷ் அன்பு விடம் மற்றும் தனியாக பேசுகிறான். தன்னுடைய காதலை பற்றி ஆனந்தியிடம் சொல்லும் படி கேட்கிறான். அன்பு என்ன செய்வது என்று முடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் அழகன் கேரக்டர் அவன் மனசாட்சி வடிவத்தில் வந்து அவனுக்கு தைரியம் கொடுக்கிறது.
சாயங்காலம் ஆனந்தியை அழைத்துக்கொண்டு ஹாஸ்டலுக்கு போகும்போது அன்பு பைக்கை நிறுத்தி ஆனந்திக்கு கோவிலில் வாங்கிய ஜிமிக்கி கம்மல் கொடுக்கிறான். ஆனந்திக்கு அந்த ஜிமிக்கி ரொம்பவும் பிடித்துப் போகிறது.
மேலும் அழகன் யார் என சொல்ல அன்பு முயற்சி பண்ணும் போது மகேஷ் அந்த இடத்திற்கு வந்து விடுகிறான். இத்தோடு நேற்று எபிசோடு முடிந்து இருக்கிறது. இன்றைய ப்ரோமோவில் மகேஷ் ஹாஸ்டல் வார்டனை சந்தித்து பேசுகிறான்.
அது மட்டும் இல்லாமல் மகேசும் கோவையில் வாங்கிய கொலுசை கிப்டாக ஆனந்திக்கு கொடுக்கிறான். இரண்டு பேருமே ஒரே நேரத்தில் கிப்ட் கொடுப்பதால் ஆனந்திக்கு சந்தேகம் வருகிறது. அதே நேரத்தில் ஆனந்தி அண்ணன் வேலு தன்னுடைய மனைவி வாணியிடம் ஆனந்தி சென்னையில் தான் இருக்கிறாள்.
நீ அந்த நகையெல்லாம் கொடு நான் அவளிடம் சென்று போய் கொடுக்கிறேன் எனக்கு சொல்கிறான். அதற்கு அவனுடைய மனைவி வாணி எதுவுமே சொல்லாமல் திருத்துறை என முழித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆனந்தியின் வாழ்க்கையில் ஏற்கனவே ஏகப்பட்ட வில்லிகள் இருக்கும் போது இப்போ இந்த வாணியும் புது வில்லியாக லிஸ்டில் சேருகிறாள்.
சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- அன்பு வாழ்க்கையை புரட்டி போட்ட 2 சம்பவங்கள்
- சிங்கப்பெண்ணில் போட்ட திட்டத்தை நிறைவேற்ற போகும் சுயம்புலிங்கம், மித்ரா
- சிங்கப்பெண்ணில் காதல் ஆட்டத்தில் இருந்து விலகும் மகேஷ், ஆபத்தை நெருங்கும் ஆனந்தி
- சிங்கப்பெண்ணில் ஆனந்திக்கு ஏற்பட போகும் அசிங்கம்