திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

சிங்கப்பெண்ணில் நட்புக்கும், காதலுக்கும் இடையே சிக்கிய அன்பு, ஆனந்தி.. கால சுத்துன பாம்பாக காத்திருக்கும் மித்ரா!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் காதலர்களாய் இணைந்து விட்டார்கள். இனி அன்புவின் அம்மாவை சமாளிப்பது எப்படி, ஆனந்தியின் அக்கா கல்யாணம் என்பதுதான் அடுத்த கட்ட கதையின் நகர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வண்டி எங்க கிளம்பச்சோ அங்கேயே வந்து நிற்பது போல் கதை வந்துவிட்டது. அன்பு தான் அழகன் என்று ஆனந்தி தெரிந்துகொள்ளும் அதே நேரத்தில், அன்பு அழகன் இல்லை மித்ரா தான் அன்புவை அழகன் என்று நம்ப வைத்து இருக்கிறாள் என மகேஷ் புரிந்து கொள்கிறான்.

நட்புக்கும், காதலுக்கும் இடையே சிக்கிய அன்பு, ஆனந்தி

இவ்வளவு நாள் மித்ரா ஆடிய ஆட்டத்திற்கு அடித்த அடி சரி என்றாலும் ஆனால் மீண்டும் அன்புவை முழுசாக நம்பும் மகேஷ், ஆனந்தி இடம் காதலை சொல்லவும் காத்திருக்கிறான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு தான் அழகன் என்று தெரிந்து கொண்டது எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், மகேஷ் சார் கஷ்டப்படுத்தப் போவதை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்று ஆனந்தி நினைக்கிறாள்.

மகேஷ் சார் நேரா வந்து என்ன அடிச்சிருந்தா கூட பரவாயில்லை, என்ன நம்புகிறேன் என்று சொல்லிட்டாரே அவரை எப்படி கஷ்டப்படுத்துவது என அன்பு யோசிக்கிறான். என்னதான் இவர்கள் காதலர்களாய் ஒன்று சேர்ந்திருந்தாலும், மகேசை நினைத்து இருவருக்குமே மனசுக்குள் ஒரு உறுத்தல் இருக்கிறது.

இப்படி நட்பு மற்றும் காதலுக்கு இடையே சிக்கிக் கொண்டு இருவரும் தவிப்பது போல் சீரியல் இனி நகரும். அது மட்டுமில்லாமல் அன்பு மற்றும் ஆனந்தி முன்னாடி மகேஷ் மித்ராவை அடித்திருக்கிறான். மித்ரா சும்மா இருக்கும்போதே சீரும் நாகமாக இருப்பாள், இனி இப்படி ஒரு சம்பவத்திற்கு பிறகு மொத்தமும் விஷமாக மாறி எப்போது அன்பு மற்றும் ஆனந்தியை போட்டு தள்ளலாம் என்று தான் பார்த்துக் கொண்டிருப்பாள்.

இனி அன்பு, ஆனந்தி, மகேஷ் மூன்று பேருக்கும் மித்ரா காலைச் சுற்றிய பாம்பு தான். எது எப்படியோ இன்னும் சில நாட்களுக்கு அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் கெமிஸ்ட்ரியை வைத்து ரசிகர்களை குதூகலப்படுத்தி விடுவார் இயக்குனர்.

- Advertisement -

Trending News