புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிங்கப்பெண்ணில் நண்பர்களாய் முகமூடி மாட்டும் அன்பு, ஆனந்தி.. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குறாங்களே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே யோசிக்காமல் செய்த தவறுகளால் அன்பு எவ்வளவு கஷ்டப்பட்டான். ஆனால் இப்போது மீண்டும் அதே தவறை தான் நேற்றைய எபிசோடிலும் செய்கிறான். நேற்றைய எபிசோடில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது மகேஷ், மித்ராவை அடித்ததை தான்.

ஆனால் அதன் பின்னர் இவ்வளவு பெரிய திருப்பம் நடைபெறும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவ்வளவு தான் அன்பு தான் அழகன் என்று தெரிந்துவிட்டது அடுத்து இந்த சீரியல் எப்படி நகரும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் மீண்டும் அதே முக்கோண காதல் கதையை கொண்டு வந்து விட்டார் இயக்குனர். அதாவது அன்பு தான் அழகன் என்று மகேஷை நம்ப வைக்க மித்ரா போட்ட திட்டம் அவனுடைய அம்மா மித்ராவிடம் போன் பேசும்போது அவனுக்கு தெரிந்து விடுகிறது.

நண்பர்களாய் முகமூடி மாட்டும் அன்பு, ஆனந்தி

தெரிந்த பின்னாடிதான் அன்பு மற்றும் ஆனந்தியை தேடி மித்ராவுடன் அலைகிறான். அதே நேரத்தில் மகேஷ் ஆனந்தியை காதலிப்பதை பற்றி அன்பு ஆனந்தியிடம் சொல்லிவிடுகிறான். ஆனந்தியும் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்து நம் காதலை பற்றி மகேஷ் சார் கிட்ட சொல்லிடலாம் என சொல்கிறாள்.

மகேஷ் போன் பண்ணும் போது அந்த போனை எடுத்து எங்கே இருக்கிறாள் என்ற தகவலையும் சொல்கிறாள். உடனே மகேஷ் மித்ராவுடன் அன்பு மற்றும் ஆனந்தி இருக்கும் கோவிலுக்கு வருகிறான். இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து மகேஷ் பொங்கி எழுவான் என்று மித்ரா நினைக்கிறாள்.

ஆனால் நடந்தது என்னவோ மகேஷ் கையால் மித்ரா அடி வாங்கியதுதான். எதுக்கு என்ன அடிக்கிற மகேஷ் என்று கேட்கும்போது, நீ அம்மா கிட்ட போன் பேசினது எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன். இனிமே என் வீட்டு பக்கம் வர வேலை வச்சுக்காத என்று திட்டி அனுப்பி விடுகிறான்.

அதே நேரத்தில் அன்பு விடம் பல தடவை மன்னிப்பு கேட்கிறான். மித்ராவின் பேச்சைக் கேட்டு உன்னை சந்தேகப்பட்டது தவறுதான் என்னை மன்னித்துவிடு என்கிறான். அப்போது ஆனந்தி, மகேஷிடம் உண்மையை சொல்ல முயற்சி செய்கிறாள்.

ஆனால் அன்பு வேண்டவே வேண்டாம் என்று அவளை தடுத்து விடுகிறான். உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும், சீக்கிரமாக சொல்கிறேன் என மகேஷ் ஆனந்தியிடம் சொல்கிறான். அதே நேரத்தில் உன்னை மறுபடியும் உன்னுடைய பழைய ஹாஸ்டல்லிலேயே கொண்டு போய் விடுகிறேன் அதுவரைக்கும் அன்பு வீட்டில் இரு என்று சொல்கிறான்.

அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் அதற்கு சம்மதிக்கிறார்கள். உடனே மகேஷ் அன்பு விடம் நீ இனிமே எங்கேயும் போக வேண்டாம் நாளையிலிருந்து கம்பெனிக்கு வேலைக்கு வா என்று ரொம்பவும் வற்புறுத்தி சொல்லிவிட்டு போகிறான். மகேஷ் போனதும் ஆனந்தி எதுக்கு அன்பு நம்ம காதல் விஷயத்தை அவர் கிட்ட சொல்ல விடாம மறைச்சீங்க என கேட்கிறாள்.

மகேஷ் சாரிடம் உடனே இதை சொன்னால் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது, நேரம் பார்த்து நானே அவருக்கு எடுத்து சொல்கிறேன் என அன்பு சொல்கிறான். ஹாஸ்டல் வார்டனுக்கு ஆனந்தி எதனால் ஹாஸ்டலுக்கு லேட் ஆக வந்தாள் என ஏற்கனவே தெரிந்துவிட்டது, இதனால் அடுத்த எபிசோடிலேயே அவள் ஹாஸ்டலுக்கு போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

இனி மகேஷ் காக இவர்கள் இருவரும் நண்பர்கள் என்ற முகமூடியை மீண்டும் மாட்ட இருக்கிறார்கள். இனி மகேஷின் ஒரு தலை காதல், அன்புவின் அம்மா துளசியை திருமணம் செய்து வைக்க நினைப்பது, ஆனந்தியின் வீட்டு பிரச்சனை, கருணாகரன் மேவற்றும் மித்ராவின் சதி வலை என அனைத்திலும் மாட்டிக் கொண்டு தங்களுடைய காதலை மண் குதிரையாக மாற்றப் போகிறார்கள் என்பது சரியாக தெரிகிறது.

- Advertisement -

Trending News